‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் ஆக.21-ல் ரிலீஸ்!

0
21

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘விருந்து தயாராக உள்ளது. ஆகஸ்ட் 21-ம் தேதி ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது. படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகலாம் அல்லது தீபாவளியையொட்டி சற்று தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here