கொல்கத்தா: “ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜி உரையாற் றுவது பெருமையான விஷயம்” என மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் வரும் 27-ம் தேதி உரையாற்ற வுள்ளார்.
இங்கிலாந்து தொழிலதிபர் களையும் சந்தித்து, மேற்குவங் கத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். மம்தா பானர்ஜி யின் இங்கிலாந்து பயணம் குறித்து கொல்கத்தாவில் நடை பெற்ற சிஐஐ நிகழ்ச்சியில் பங் கேற்ற மாநில ஆளுநர் ஆனந்தா போஸிடம் கருத்து கேட்கப்பட் டது.
அப்போது அவர் கூறிய தாவது: மேற்குவங்க மாநிலத்துக்கு எதாவது நல்லது நடைபெற் றால், அது எனக்கு மகிழ்ச்சி யளிக்கிறது. ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தில் உரையாற்ற, ரவீந்திரநாத் தாகூர் மண்ணில் இருந்து மேற்கு வங்க முதல் வருக்கு உரையாற்ற அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது பெருமை யான விஷயம். இவ்வாறு ஆளுநர் ஆனந்தா போஸ் கூறினார்.