இரணியல்: வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை

0
249

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை. சமீபத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக தக்கலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை கட்டி முடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இதற்கிடையே வங்கியில் இருந்து வந்த ஊழியர்கள் பணம் கட்ட கூறி மணிகண்டனை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் மனவருத்தமடைந்த மணிகண்டன் நேற்று (18-ம் தேதி) மாலை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, வாயில் நுரையை தள்ளி கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மணிகண்டன் உயிரிழந்தார். மணிகண்டனை வங்கி ஊழியர்கள் மிரட்டியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here