Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: பைக் மோதி மூதாட்டி படுகாயம்

இரணியல்: பைக் மோதி மூதாட்டி படுகாயம்

0

திங்கள் சந்தை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட்சன் மனைவி பால் தங்கம் (68). இவர் கடைக்கு செல்வதற்காக ஆலங்கோடு – அழகிய மண்டபம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக பால் தங்கம் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவரது மகள் சசிகலா (41) என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை ஓட்டி வந்த முத்தலகுறிச்சி பகுதி சேர்ந்த ஐயப்பன் (47) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version