லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – பதிலடியில் ஈரான் பெட்ரோ ரசாயன ஆலை சேதம்

0
29

லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்​ரேல் விமான தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரான் நகரங்​களில் இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்​டும் தீவிர போர் ஏற்​படும் சூழல் ஏற்​பட்​ட​தால், ஈரான் மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

லெப​னான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வ​தால், அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படு​வது பாதிக்​கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார். இதற்​காக இஸ்​ரேல் அதிபர் நெதன்​யாகு​வை​யும், அதிபர் ட்ரம்ப் கண்​டித்​தார். ஆனாலும், ஹிஸ்​புல்லா தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான தாக்​குதலை இஸ்​ரேல் நிறுத்​த​வில்​லை. லெப​னான் தலைநகர் பெய்​ரூட் தென்​பகு​தியை ஆக்​கிரமித்து முன்​னேறி வரும் இஸ்ரேல் ராணுவம், எச்​சரிக்கை விடுக்​காமல் தொடர் தாக்குதலை மேற்​கொண்டு வரு​கிறது.

இஸ்​ரேலின் இந்த நடவடிக்கை மத்​திய கிழக்​கில் முழு அளவி​லான போரை ஏற்​படுத்​தும் என ஈரான் எச்​சரிக்கை விடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் கடந்த ஏப்​ரல் மாதம் சண்டை நிறுத்​தம் ஏற்​பட்​டதற்​குப்​பின் முதல் முறை​யாக இஸ்​ரேல் மீது ஈரான் நேற்று ஏவு​கணை தாக்​குதலை நடத்​தி​யது. ஈரானின் 10 ஏவு​கணை​களை இஸ்​ரேல் நடு​வானில் இடைமறித்து அழித்​தது. இஸ்​ரேலின் வடக்கு பகுதியில் சில ஏவு​கணை​கள் விழுந்து வெடித்​தன.

இதனால் இஸ்​ரேலின் பல நகரங்​களில் சைரன் எழுப்​பப்​பட்​டது. மக்​கள் பதுங்கு குழி​யில் சென்று மறைந்​தனர். இஸ்​ரேலின் நெவாடிப், டெல் நோஃப் நகரங்​களில் உள்ள 2 விமான தளங்​களை தாக்​கிய​தாக ஈரான் கூறியது. ஆனால் அங்கு என்ன பாதிப்பு ஏற்பட்​டது என்ற அறி​விப்பு வெளிவர​வில்​லை. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி​யாக இஸ்​ரேல் போர் விமானங்​கள் ஈரானின் மத்​திய மற்​றும் மேற்கு பகு​தி​யில் குண்டு வீசின.

இதனால் இஸ்​பஹான், கரஜ் மற்​றும் டேப்​ரிஸ் நகரங்​களில் பயங்கர சத்​தம் கேட்​டது. ஈரானின் மஹ்சஹர் பெட்ரோ ரசாயன ஆலை மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக இஸ்​ரேல் ராணுவம் கூறியது. இதனால் இருதரப்​பும் மீண்​டும் கடும் போரில் ஈடு​படும் வாய்ப்​பு​கள் உரு​வாகி​யுள்​ளன. இந்​த போர்ச் சூழல் அமெரிக்கா – ஈரான் இடையே​யான அமைதி ஒப்​பந்​தம் முயற்​சியை பாதித்துள்ளது. இதனால் ஈரான் மற்​றும் இஸ்​ரேல் பதில் தாக்​குதல் நடவடிக்​கை​யில் ஈடு​பட வேண்​டாம்​ என அமெரிக்​க அதிபர்​ ட்ரம்ப்​ வேண்​டுகோள்​ விடுத்​துள்​ளார்​.

பதற்றத்தை தணிக்க வேண்டும்…

மத்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் தற்போது நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. இதனால் சர்வதேச நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கிறது.

இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சர்வதேச பொருளாதாரம், எரிசக்தி விநியோகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவின் சார்பில் ஓர் அழைப்பை விடுக்கிறோம். சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

பதற்றத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது. ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

ஈரானும் இஸ்ரேலும் நேற்று பரஸ்பரம் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டன. அப்போது ஈரானை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மாரி வெக்ஸ் என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது.

மாரிவெக்ஸ் கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். அவர்கள் உதவி கோரி தகவல்களை அனுப்பினர். மத்திய அரசு விரைந்து செயல்பட்டு ஓமன் நாட்டின் உதவியை கோரியது. அந்த நாட்டு கடற்படை வீரர்கள் படகுகளில் சென்று 24 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து இந்திய கப்பல் போக்கு வரத்து துறை இயக்குநர் ஒபேஷ் குமார் சர்மா டெல்லியில் நேற்றுகூறும்போது, “திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் மாரிவெக்ஸ்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்’’ என்று தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here