செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி

0
21

செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சாமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய அணி நேற்று இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நிஹால் சரின் மட்டும் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். மகளிர் பிரிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் ஃபின்லாந்தை தோற்கடித்தது.

திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், சவிதா ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் ஆர்.வைஷாலி தனது ஆட்டத்தை டிரா செய்திருந்தார். இந்திய அணிகளுக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here