இந்தியா – ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணிகள் இன்று மோதல்

0
32

ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரை இந்​திய மகளிர் அணி 2-1 என கைப்​பற்றி கோப்பையை வென்​றது.

இந்​நிலை​யில் டி20 தொடரை தொடர்ந்து இரு அணி​களும் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரில் மோதுகின்​றன. இதன் முதல் ஆட்​டம் இன்று காலை 9.20 மணிக்கு பிரிஸ்​பன் மைதானத்​தில் நடை​பெறுகிறது.

கடந்த ஆண்டு நடை​பெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணியை அதிர்ச்சி அளிக்​கும் வகை​யில் இந்​திய அணி தோற்​கடித்து இருந்​தது. இந்த தோல்விக்கு தற்​போதைய இருதரப்பு தொடரில் ஆஸ்​திரேலிய அணி பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

இந்​தத் தொடருடன் ஆஸ்​திரேலிய அணி​யின் நட்சத்திரமான கேப்​டன் அலிசா ஹீலி ஓய்வு பெற உள்ளார். இந்​திய அணி​யின் பேட்​டிங்​கில் ஸ்மிருதி மந்தனா, பிர​திகா ராவல், ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ஹர்​மன்​பிரீத் கவுர் ஆகியோர் வலுசேர்க்​கக்​கூடும். பந்​து​வீச்​சில் ரேணுகா தாக்​குர், சரணி, தீப்தி சர்மா உள்​ளிட்​டோர் ஆஸ்திரேலிய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here