தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

0
27

 தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் பதவி விலக வலி​யுறுத்தி சென்​னை​யில் இண்​டியா கூட்டணி தலை​வர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

எஸ்​ஐஆர் மூலம் நாடு முழு​வதும் 13 கோடிக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர் எனக்​கூறி, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் பதவி விலக வலி​யுறுத்தி டெல்​லி​யில் தொடர் போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

அதற்கு ஆதரவு தெரிவிக்​கும் வகை​யில் தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில் இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் பங்​கேற்ற ஆர்ப்​பாட்​டம் சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் பேசுகை​யில், “நம் அனை​வருக்​கும் ஒரே கொள்​கை, ஜனநாயகத்தை காப்​பாற்ற வேண்​டும்; எஸ்​ஐஆர்-ஐ திரும்​பப்​பெற வைக்க வேண்​டும் என்​பது தான்.

அதற்கு முதல் படி​யாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்​டும். நமது இலக்கை அடை​யும் வரை போராட்​டம் தொடரும்” என்​றார். தவெக சார்​பில் பங்​கேற்ற அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “எஸ்​ஐஆர் மூலம் ஏழை, எளிய மக்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த ஜனநாயகத்​துக்கு எதி​ரான செயலை நாங்​கள் எதிர்க்​கிறோம்” என்​றார்.

விசிக தலை​வர் தொல்​.​திரு​மாவளவன் பேசும்​போது, “எஸ்​ஐஆர் மூலம் மிகப்​பெரிய வாக்கு திருட்டு நடந்​துள்​ளது. மம்தா பானர்​ஜி, மு.க.ஸ்​டா​லின், பின​ராயி விஜயன், அரவிந்த் கேஜ்ரி​வால் ஆகிய கொள்கை மற்​றும் அரசி​யல் எதிரி​கள் திட்​ட​மிட்டு கடந்த தேர்​தலில் வீழ்த்​தப்​பட்​டுள்​ளனர் ” என்​றார்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ, மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், ஐயுஎம்​எல் மாநில பொதுச்​செய​லா​ளர்​ அபூபக்​கர் உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here