இனயம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சார்ந்த லேனடிமை (48) என்பவர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரியம் சார்பாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ நேற்று வழங்கினார். உடன் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.