பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது: பசுமை தீர்ப்பாயம்

0
42

சுற்​றுச்​சூழல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பட்​டினப்​பாக்​கம் மற்​றும் நீலாங்​கரை கடற்​கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனு​ம​திக்க முடி​யாது. சிலைகளை வேறு இடங்​களுக்கு அனுப்ப வேண்​டும் என்று தேசிய பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

விநாயகர் சதுர்த்​தி​யை யொட்​டி, நீர்​நிலைகளில் சிலைகளை கரைப்​ப​தால் மாசு ஏற்​படு​கிறது. அறிவிக்​கப்​ப​டாத நீர்​நிலைகளில் சிலைகளை கரைப்​பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும் என கோரி சென்னை புதுப்​பேட்​டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்​பவர் தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்​வில் கடந்த 2023-ம் ஆண்டு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்​கு, தீர்ப்​பாய அமர்​வின் நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்​தி​ய​நா​ராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் பிர​சாந்த் கார்​க​வாஹ ஆகியோர் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது 38 மாவட்ட ஆட்​சி​யர்​கள், தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரி​யம், சென்னை மாநக​ராட்சி தரப்​பில் அறிக்​கைகள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. அவற்​றில், ‘பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸில் செய்​யப்​பட்ட சிலைகள் விற்​பனையை தடுக்க நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இதுசம்​பந்​த​மாக மக்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் காசிமேடு, திரு​வொற்​றியூர், எண்​ணூர், பட்​டினப்​பாக்​கம், நீலாங்​கரை ஆகிய கடற்​கரைகள் விநாயகர் சிலைகளை கரைப்​ப​தற்​கான இடங்​களாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன’ என கூறப்​பட்​டிருந்​தது.

பட்​டினப்​பாக்​கம், நீலாங்​கரை ஆகிய கடற்​கரைகளில் ஆமை​கள் இனப்​பெருக்​கம் நடை​பெறுகிறது. மேலும், இப்​பகு​தி​கள் கடற்​கரை ஒழுங்​கு​முறை மண்​டலம்- 1 பகு​தி​யாக உள்​ள​தால், அங்கு சிலைகளை கரைக்க அனு​ம​திக்​கக் கூடாது என மனு​தா​ரர் தரப்​பில் வாதிடப்​பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட தீர்ப்​பாய உறுப்​பினர்​கள், சுற்​றுச்​சூழல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பட்​டினப்​பாக்​கம் மற்​றும் நீலாங்​கரை பகு​தி​களுக்கு செல்​லும் சிலைகளை மற்ற பகு​தி​களுக்கு ஏன் மாற்​றி​விடக் கூடாது என கேள்வி எழுப்​பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்​கறிஞர், “மற்ற பகு​தி​களுக்கு மாற்​று​வதை பொறுத்​தவரை, சட்​டம் ஒழுங்​கு, கூட்ட நெரிசல், மத ரீதி​யாக பதற்​ற​மான பகு​தி​கள் ஆகிய​வற்றை கருத்​தில்​கொள்ள வேண்​டி​யுள்​ளது.

இதுசம்​பந்​த​மாக அதி​காரி​களு​டன் கலந்​து பேசி, முடிவை தெரவிக்க அவகாசம் வழங்க வேண்​டும்” என்று கேட்​டுக் கொண்​டார். இதை ஏற்​றுக்​கொண்ட தீர்ப்​பாய அமர்வு உறுப்​பினர்​கள், சுற்​றுச்​சூழல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நீலாங்​கரை, பட்​டினப்​பாக்​கம் கடற்​கரைகளில் சிலைகளை கரைக்க அனு​ம​திக்க முடி​யாது.

இந்த 2 இடங்​களி​லும் கரைக்​கப்​படும் சிலைகளை மற்ற 4 இடங்​களுக்கு அனுப்பி வைப்​பது தொடர்​பாக ஆலோ​சனை கூட்​டம் நடத்​தி, அரசின் கருத்தை அறிந்து செப்​.16-ம் தேதி தெரிவிக்க வேண்​டும்​” என்​று உத்​தர​விட்​டுள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here