“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்

0
20

இந்திய மல்யுத்த வீராங்கனை​யான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த போட்​டி​யில் களமிறங்க முடிவு செய்​திருந்​தார். இதற்​காக உத்​தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று முன்​தினம் தொடங்​கிய சீனியர் ரேங்​கிங் தொடரில் 57 கிலோ எடைப்​பிரி​வில் களமிறங்க இருந்​தார்.

இந்த போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக நேற்று வினேஷ் போகத் சென்​றிருந்​தார். அப்​போது இந்​திய மல்​யுத்த சங்க அதி​காரி​கள் வினேஷ் போகத்தை போட்​டி​யில் பங்​கேற்க அனு​ம​திக்​க​வில்​லை. ஏனெனில் வரும் ஜூன் 26-ம் தேதி வரை எந்​தவொரு உள்​நாட்​டுப் போட்​டி​யிலும் பங்​கேற்க வினேஷ் போகத்​துக்கு இந்​திய மல்​யுத்த சங்​கம் தடை விதித்​துள்​ளது.

இதற்கு காரணம் வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப​பெற்றது தொடர்​பாக உலக மல்​யுத்த கூட்​டமைப்​புக்​கும், தேசிய ஊக்​கமருந்து எதிர்ப்பு அமைப்​புக்​கும் 6 மாதத்​துக்கு முன்​னரே தகவல் தெரிவிக்​க​வில்லை என குற்​றம்​சாட்​டப்​பட்​டது. மேலும் அவர் மீது ஒழுங்​கு​முறை மீறல் குற்​றச்​சாட்​டும் சுமத்​தப்​பட்​டது. இதொடர்​பாக இந்​திய மல்​யுத்த சங்​கம் வினேஷ் போகத்​திடம் விளக்​கம் கேட்டு 15 பக்க கடிதம் அனுப்பி இருந்​தது.

இதற்கு வினேஷ் போகத் பதில் அளித்​திருந்​தார். ஆனால் பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களுக்கு வினேஷ் போகத் பதில் அளிக்​க​வில்லை எனவும், அவரது பதில் முழுமை பெறாமல் இருப்​ப​தாக​வும் இந்​திய மல்​யுத்த சங்​கம் தெரி​வித்​துள்​ளது. இதன் காரண​மாகவே வினேஷ் போகத், கோண்டா போட்​டி​யில் கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட​வில்லை என இந்​திய மல்​யுத்த சங்​கம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக 31 வயதான வினேஷ் போகத், இந்​திய மல்​யுத்த அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதன் பின்​னர் வினேஷ் போகத் கூறிய​தாவது: நான் என்ன செய்ய வேண்​டும் என்று நீங்​கள் எதிர்​பார்க்​கிறீர்​கள்? நான் சந்​நி​யாசம் வாங்​கிக்​கொண்டு விளை​யாட்டை விட்டு போய்​விட வேண்​டு​மா? தோல்​வியை ஒப்​புக்​கொள்ள வேண்​டு​மா? அதன் மூலம் எனக்கு எதி​ரான அவர்​களின் சதி வெற்றி பெற வேண்​டு​மா? நான் மல்​யுத்​தத்​தைக் கைவிட வேண்​டும், நான் சோர்​வடைய வேண்​டும், நான் கைகூப்பி வணங்​கி​விட்டு வெளி​யேற வேண்​டும் என்று விரும்​பு​கிறார்​கள்.

இந்​திய மல்​யுத்த சங்​கத்​தின் தற்​போதைய தலை​வர் சஞ்​சய் சிங், முன்​னாள் தலை​வர் பிரிஜ் பூஷண் மற்​றும் அவரது குழு​வினர் என அதி​காரம் மற்​றும் கட்​டுப்​பாட்​டில் இருப்​பவர்​கள் அனை​வரும் இதையே விரும்​பு​கிறார்​கள். போராடு​வதற்கு எனக்கு உரிமை இருக்​கிறது. சஞ்​சய் சிங்கோ அல்​லது எந்​தவொரு சம்​மேளனமோ எனக்கு இந்த உரிமை​யைக் கொடுக்​க​வில்​லை.

இந்த நாட்​டின் குடிமகளாக எனது உரிமை என்ன என்​பது எனக்​குத் தெரி​யும். இந்​திய மல்​யுத்த சம்​மேளன நிர்​வாகத்​துக்கு எதி​ராகப் பேசி​யதற்​காகவே நான் தண்​டிக்​கப்​படு​கிறேன். நான் துன்​பங்​களை அனுப​வித்து வரு​கிறேன். ஆனால், அந்​தத் துன்​பங்​களைத் தாங்​கும் சக்​தியை கடவுள் எனக்​குக் கொடுத்​துள்​ளார்.

நான் அதை எதிர்​கொள்​வேன். நான் கடின​மாக உழைக்​கிறேன், அதற்​கான வலிமை​யும் என்​னிடம் உள்​ளது. நான் நேர்மை மற்​றும் உண்​மை​யின் பாதை​யில் நடந்து கொண்​டிருக்​கிறேன்​. அதற்​கான பலனை கடவுள்​ நிச்​ச​யம்​ எனக்​குத்​ தரு​வார்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here