“இன்னும் அதிகம் உழைக்கலாம்…” – ஏடிஹெச்டி இருப்பது குறித்து பார்வதி விவரிப்பு

0
26

தனக்கு கவனக்குறைவு / அதிவேக செயல்பாடு குறைபாடு (ஏடிஹெச்டி) இருப்பதாக தெரிவித்துள்ள நடிகை பார்வதி திருவோத்து, வருடத்தில் சில நாட்கள் மட்டும் வேலை செய்துவந்த நிலையில், இனி இன்னும் அதிகமாக வேலை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “எனக்கு கவனக்குறைவு / அதிவேக செயல்பாடு குறைபாடு (ஏடிஹெச்டி) உள்ளது. ஆனால், அதை நான் பெரிய விஷயமாக கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை காலம் மற்றவர்களைப் போல எனக்கு செயல்படவில்லை. அது நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது.

நான் விரும்பியபடி அதை நீட்டிக்கொள்ளலாம். இதற்கு இனி நான் தூங்கவே போவதில்லை என்று அர்த்தம் இல்லை. நானும் தூங்கி எழுவேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இனி உழைக்கலாம்.

நீங்கள் இறந்து போய்விட மாட்டீர்கள், சரிதானே. நீங்கள் தோல்வி அடையளாம். ஆனால் பெருமையுடன் தோல்வி அடையுங்கள். உங்களை சிதறடிக்கும் விஷயங்கள் வேறு விதங்களில் உங்களை ஒன்றிணைக்கலாம். ஆனாலும் அதைச் செய்யுங்கள். ஏனெனில் எனக்கு வளர்ச்சியையும் உத்வேகத்தையும் வெளியே தேடுவது சலிப்பாக இருந்தது. நான் கடுமையாக உழைத்தேன். இந்த பிரபஞ்சம் அதன் ஆசிர்வாதத்தை திருப்பி வழங்கியது. எனக்கு ஆச்சரியமான வாய்ப்புகள் எல்லாம் கிடைத்தது” என்று பார்வதி தெரிவித்தார்.

20 ஆண்டுகளாக திரைத் துறையில் இயங்கி வரும் பார்வதி திருவோத்து, அவரின் நடிப்புக்காகவும், சமூக பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகளுக்காகவும் அறியப்படுகிறவர்.

இந்த ஆண்டில் அவர், ‘ஐ நோபடி’ படத்தில் அவர் பிரித்விராஜ் சுகுமாரன் உடனும், ‘பிரதம திருஷ்டிய குட்டக்கர்’ படத்தில் காவல் துறை அதிகாரியாகவும் நடித்திருந்தார். தமிழில் இவர் ‘பூ’, ‘மரியான்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here