ஹைதராபாத் – திருப்பதி விமானத்தில் கோளாறு

0
336

ஹைதராபாத்தில் இருந்து நேற்று காலை திருப்பதிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து 80 பயணிகளுடன் நேற்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் திருப்பதிக்கு புறப்பட்டது.

புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், ஹைதராபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் கொடுத்தார்.

உடனடியாக விமானத்தை தரை இறக்கும்படி உத்தரவு வந்ததால், அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன் பின்னர், பயணிகள் வெவ்வேறு விமானங்களில் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here