குஜராத் மாநிலம் கிழக்கு கட்ச் மாவட்டம் காந்திதாமில் உள்ள அடேசர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ராம்கர் மோஹன்கர் கோசாய் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்கள் மூலம் அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பொதுக் கருத்து உருவாக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் கோசாய் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஜந்தர் மந்தர் போராட்டத்தைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி எடுத்த முடிவுகளை ஏற்றுக்கொண்டு, மோடி அரசுக்கும், சங் பரிவாருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் எனது காவலர் பணியிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன்னலமற்ற தேசிய சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புவதாகவும்’’ அவர் கூறியுள்ளார்.















