கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு: குத்துச்சண்டையில் பதக்க வேட்டைக்கு தயாராகும் இந்திய வீரர், வீராங்கனைகள்

0
21

 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் ஆட்​டங்​களில் பிரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்​மின் லம்​போரியா (57 கிலோ), ஆதித்யா பிர​தாப் சிங் (65 கிலோ) ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். இரவு 10.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டங்​களில் பிரியா கங்​காஸ் (60 கிலோ), ஜது​மணி சிங் (55 கிலோ), சுமித் குண்டு (70 கிலோ) ஆகியோர் முதல் சுற்று ஆட்​டங்​களில் களமிறங்​கு​கின்​றனர்.

இந்​தி​யா​வின் பதக்​கப் பட்​டியலில் குத்​துச்​சண்டை விளை​யாட்டு மீண்​டும் கணிச​மான பங்​களிப்பை வழங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. காமன்​வெல்த் விளை​யாட்​டில் ஒட்​டுமொத்​த​மாக குத்​துச்​சண்​டை​யில் மட்​டும் இந்​தியா இது​வரை 44 பதக்​கங்​களை வென்று குவித்​துள்​ளது. எனவே இந்த முறை​யும் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் சிறந்த திறனை வெளிப்​படுத்​து​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​திய குத்​துச்​சண்டை வீரர், வீராங்​க​னை​களில் 8 பேருக்கு முதல் சுற்​றில் ‘பை’ (நேரடி​யாக அடுத்த சுற்​றுக்​குச் செல்​லும் வாய்ப்​பு) பெற்​றுள்​ளனர். இந்த வகை​யில், ஜாஸ்​மின் லம்​போரியா (57 கிலோ), பிரியா கங்​காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) ஆகியோர் பதக்​கத்தை உறுதி செய்ய இன்​னும் ஒரே ஒரு வெற்​றியை பெற்​றால் போதும்.

முன்​னாள் உலக சாம்​பிய​னான லோவ்​லினா போர்​கோஹெய்ன், ஐந்து வீராங்​க​னை​கள் மட்​டுமே பங்​கேற்​கும் மகளிருக்​கான 75 கிலோ எடைப் பிரி​வில் நேரடி​யாக அரை​யிறு​திப் போட்​டிக்​குத் தகுதி பெற்​றுள்​ளார். 54 கிலோ எடைப் பிரி​விலிருந்து 51 கிலோ எடை பிரிவுக்கு மாறி​யுள்ள ராணுவ வீராங்​கனை சாக் ஷி சவுத்ரி மீதும் எதிர்​பார்ப்பு உள்​ளது. அவர், தேர்​வுப் போட்​டிகளின் போது உலக சாம்​பியன்​களான நிகத் ஜரீன், மீனாட்சி ஹூடா​வைத் தோற்​கடித்​திருந்​தார். அதைத் தொடர்ந்து செக் கிராண்ட் ஃப்ரீ போட்​டி​யில் தங்​கம் வென்று தனது திறமையை மீண்​டும் நிரூபித்​திருந்​தார்.

ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் வெண்​கலம் வென்ற ப்ரீத்தி (54 கிலோ) மற்​றும் சமீபத்​தில் ஆசிய சாம்​பியன்​ஷிப்​பில் வெற்றி பெற்​றுத் திரும்​பிய அருந்​ததி (70 கிலோ) ஆகியோரும் இந்​தி​யா​வின் பதக்க வாய்ப்​பு​களை வலுப்​படுத்​துகின்​றனர். குத்​துச்​சண்​டை​யில் இந்​திய ஆடவர் அணி பல புதிய வீரர்​களு​டன் மாற்​றத்​துக்​கான கட்​டத்​தில் உள்​ளது. தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஏழு வீரர்​களில் ஆறு பேர் காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளில் முதன்​முறை​யாகக் களம் காண்​கின்​றனர். ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் வெண்​கலப் பதக்​கம் வென்ற நரேந்​தர் பெர்​வால் (+90 கிலோ) மற்​றும் சுமித் குண்டு (70 கிலோ) ஆகியோர் மட்​டுமே அனுபவம் வாய்ந்​தவர்​கள்.

புதி​ய​வர்​களில் ஜதுமணி சிங் (55 கிலோ) கவனத்தை ஈர்க்​கக்​கூடும். மணிப்​பூரைச் சேர்ந்த ஜதுமணி சிங் 50 கிலோ பிரி​வில் இருந்து 55 கிலோ எடைப் பிரிவுக்கு மாறி​யுள்​ளார். ஆதித்யா பிர​தாப் சிங் (65 கிலோ), கபில் போகரியா (90 கிலோ) ஆகியோர் மீதும் எதிர்​பார்ப்பு உள்​ளது. அதே வேளை​யில், உலகக் கோப்​பை​யில் பல பதக்​கங்​களை வென்ற சச்​சின் சிவாச் (60 கிலோ) பதக்​கம் வெல்​லக்​கூடிய வீர​ராக திகழ்​கிறார்.

இந்​திய குத்​துச் ​சண்டை அணி​கள்

மகளிர் அணி: சாக் ஷி சவுத்ரி (51 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்​மின் லம்​போரியா (57 கிலோ), பிரியா கங்​காஸ் (60 கிலோ), பர்​வீன் ஹூடா (65 கிலோ), அருந்​ததி சவுத்ரி (70 கிலோ), லோவ்​லினா போர்​கோஹெய்ன் (75 கிலோ).

ஆடவர் அணி: ஜது​மணி சிங் (55 கிலோ), சச்​சின் சிவாச் (60 கிலோ), ஆதித்யா பிர​தாப் சிங் (65 கிலோ), சுமித் குண்டு (70 கிலோ), அங்​குஷ் (80 கிலோ), கபில் பொகாரியா (90 கிலோ), நரேந்தர் பெர்​வால் (+90 கிலோ).

இந்திய ஜூடோ வீரர் நீக்கம்

ஊக்க மருந்து சோதனை​யில் சிக்​கியதை தொடர்ந்து இந்​திய ஜூடோ வீரர் அருண் குமார், கிளாஸ்கோ காமன்​வெல்த் போட்டியில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார்.

73 கிலோ எடைப் பிரி​வில் போட்​டி​யிடும் அருண், கடந்த மாதம் நடை​பெற்ற கிங்​டாவோ கிராண்ட் பிரீ போட்​டி​யில் பங்கேற்றிருந்தார். அப்​போது அவரிடம் நடத்த சோதனை​யின் முடிவு தற்​போது வெளி​யாகி உள்​ளது.

இதில் அருண் குமார், அனபாலிக் ஸ்டீ​ராய்டு எனும் ஊக்கமருந்தை உட்​கொண்​டது உறு​தி​செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் தேசிய ஊக்​கமருந்து தடுப்பு முகமை அவருக்​குத் தற்காலிகத் தடை விதித்​துள்​ளது. இதன் காரணமாக கிளாஸ்கோ காமன்​வெல்த் விளை​யாட்​டில் இருந்து அருண் குமார் நீக்கப்பட்டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here