டிச.11-ல் மீண்டும் வெளியாகிறது ‘ஜென்டில்மேன்’

0
32

ஷங்​கர் இயக்​குநராக அறி​முக​மான திரைப்​படம், ‘ஜென்​டில் மேன்’. அர்​ஜுன், மதுபாலா, கவுண்​டமணி உள்​பட பலர் நடித்த இப்​படம் 1993-ல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்​மான் இசை அமைத்​திருந்த இப்​படத்தை கே.டி.குஞ்​சுமோன் தயாரித்​தார். இத்​திரைப்​படம், நவீன 4கே தொழில்​நுட்​பத்​துடன் மேம்​படுத்​திய பதிப்​பாக, டிச. 11-ல் மீண்​டும் வெளியாகிறது.

இதுபற்றி கொச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய தயாரிப்​பாளர் கே.டி.குஞ்​சுமோன், “இந்த மறு​வெளியீடு, முந்​தைய தலைமுறை​யினருக்கு ஏக்​கம் கலந்த நினைவு​களைத் தூண்​டுவதுடன், புதிய தலைமுறை​யினருக்கு இப்​படத்​தின் காட்சி நேர்த்​தி​யையும் இசையையும் பெரிய திரையில் அனுபவிக்​கும் வாய்ப்​பையும் வழங்​கும் என்று நம்​பு​கிறேன். அக்​கால​கட்​டத்​தில் தமிழ் சினிமாவில் பிரம்​மாண்ட பட்​ஜெட்​டில் தயாரிக்​கப்​பட்ட படம் இது.

33 ஆண்​டுகளுக்​குப் பிறகு இப்​போது வெளியாக இருக்​கிறது. இதை தொடர்ந்து நான் தயாரித்த ‘காதல் தேசம்’, ‘ரட்​சகன்’, ‘சூரியன்’ போன்ற படங்​களை​யும் வெளி​யிட இருக்​கிறேன். ‘ஜென்​டில்​மேன் 2’ படத்​தின் முதல் கட்ட படப்​பி​டிப்பு முடிவடைந்​து​விட்​டது. அடுத்​தக்​கட்ட படப்​பி​டிப்பு ஜனவரி இறுதி அல்​லது பிப்​ரவரி​யில் தொடங்​கும்” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here