ஜெம் வீரமணி பாலியல் வழக்கு விவகாரம்: போலீஸ் காவலில் விசாரணை முடிந்து தம்பதியினர் மீண்டும் சிறையில் அடைப்பு

0
24

ஜெம் வீரமணி பாலியல் வழக்​கில் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்​கப்​பட்ட சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்மன் இரு​வரும் மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக ஜெம் கிரானைட் உரிமை​யாள​ரான வீரமணி, அவருக்கு உடந்​தை​யாக இருந்த சாந்​தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணி​யின் உதவி​யாளர் கணேசன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்​களில் சாந்​தி, மகேந்​திர சிம்​மன் ஆகியோரை போலீ​ஸார் 3 நாள் காவலில் எடுத்து விசா​ரணை நடத்​தினர். இரு​வரிட​மும் 3 நாட்​களாக இரவு, பகலாக விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

அப்​போது, வீரமணி​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிகள் எத்​தனை பேர்? எவ்​வளவு நாட்​களாக இந்த குற்​றம் நிகழ்ந்​தது? யார் யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது, பின்​னணி​யில் கட்​சி, சமூக தலை​வர்​கள், காவல்​துறை​யினர் யாரேனும் உள்​ளனரா என்பன உள்​ளிட்ட பல்​வேறு கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன.

இரு​வரும் அளித்த வாக்​கு மூலத்தை போலீ​ஸார் எழுத்​து மூலமாக​வும், வீடியோ​வாக​வும் பதிவு செய்​துள்​ளனர். இந்​நிலை​யில், இரு​வரது போலீஸ் காவல் நேற்று மாலை​யுடன் முடிவடைந்​த​தால் அவர்​களை நீதிபதி பத்மா முன்பு ஆஜர்​படுத்​திய போலீ​ஸார் மீண்​டும் புழல் சிறை​யில் அடைத்​தனர்.

இவர்​கள் அளித்த வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில் மேலும் சிலருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here