அத்திவாக்கத்தில் வெற்றுக்கால் கோழி சண்டை: 400-க்கும் மேற்பட்ட கோழிகள் பங்கேற்பு

0
18

திரு​வள்​ளூர் மாவட்​டம், அத்​தி​வாக்​கத்​தில் வெற்​றுக்​கால் கோழிச் சண்டை நேற்​றும், நேற்று முன்​தின​மும் நடை​பெற்​றது.

இப்​போட்​டி​யில் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​கள் மற்​றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 400-க்​கும் மேற்​பட்ட கோழிகள் கலந்து கொண்​டன.

2 நாட்​கள் நடை​பெற்ற இப்​போட்​டி​யில் நீதி​மன்ற அறி​வுறுத்​தல் மற்​றும் வழி​காட்​டு​தலின்​படி கோழிகளுக்கு கத்​தி, பிளேடு உள்​ளிட்​டவை காலில் கட்​டக்​கூ​டாது, போதை உணவு கோழிகளுக்கு கொடுக்​கக் கூடாது என்​பது உள்​ளிட்ட பல்​வேறு விதி​களுக்கு உட்​பட்டு நடை​பெற்​றது.

மேலும், ஒவ்​வொரு ஜோடிக்​கும் 20 நிமிடங்​கள் போட்​டி, 20 நிமிடங்​கள் ஓய்​வு, மீண்​டும் 20 நிமிடம் போட்டி என ஒரு மணி நேரம் ஒவ்​வொரு ஜோடிக்​கும் இடையே போட்​டிகள் நடை​பெற்​றது.

தமிழகத்​தில் நாட்​டுக்​கோழி, லகான் கோழி, வெள்ளை கோழியை போன்று சண்​டைக் கோழியை​யும் வளர்க்க வேண்​டும் என்ற ஆர்​வத்தை பொது​மக்​களிடம் உரு​வாக்​க​வும், சத்​தான கோழியை சாப்​பிட வேண்​டும் என்ற ஆர்​வத்தை ஏற்​படுத்​த​வும் இது​போன்ற வெற்​றுக்​கால் கோழிச் சண்டை நிகழ்ச்​சியை நடத்​து​வ​தாக இப்​போட்​டியை நடத்​தும்​ கி​ராமத்​தைச்​ சேர்​ந்​தவர்​கள்​ தெரிவித்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here