கட்​டிட வேலை​யி​ல் இருந்து கிளாஸ்கோவுக்​கு…- சாதனை படைத்த ரிஷிகண்டா சிங்!

0
23

 கிளாஸ்கோ காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்டியில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றதன் மூலம் சாதனை படைத்​துள்ள ரிஷிகண்டா சிங், கட்​டிடம் கட்​டுமிடத்​தில் தினக்​கூலி​யாக இருந்து சாம்​பிய​னாக மாறிய​வர் என்ற செய்தி அனைவரை​யும் கவர்ந்​துள்​ளது.

மணிப்பூர் மாநிலம் இம்​பாலைச் சேர்ந்த 28 வயதான ரிஷிகண்டா சிங், ஏழ்​மை​யான குடும்​பத்​தில் பிறந்​தவர். தனது இளம்​வயதை பெரும்​பாலும் வேலை பார்த்தே கழித்​துள்​ளார். இம்​பாலின் பல்வேறு பகு​தி​களில் கட்​டிட வேலைகளில் அவர் தினக்​கூலி​யாக வேலை பார்த்​துள்​ளார். செங்​கல், சிமெண்ட், பலகைகளை சுமந்து பிழைப்பை நடத்தி வந்த அவர் தனது விடா​முயற்​சி​யால் இன்று உலக விளை​யாட்டு ரசிகர்​களை திரும்​பிப் பார்த்து வந்​துள்​ளார்.

தினந்​தோறும் செங்​கல், கட்​டு​மானப் பொருட்​களை தூக்கி தூக்கி தனது உடலை வலுப்​படுத்தி வந்​துள்​ளார். இதனால் இவரது கவனம் பளுதூக்​குதல் விளை​யாட்​டுக்கு சென்​றுள்​ளது. இதற்கு முன்பு 2017-ல் நடை​பெற்ற தேசிய பளுதூக்​குதல் போட்​டி​யில் அவர் சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தார். மேலும் இளை​யோர் காமன்​வெல்த் போட்​டி​யிலும் அவர் வெண்​கலத்​தைக் கைப்பற்றியிருந்​தார்.

தனது வெற்றி குறித்து ரிஷிகண்டா சிங் கூறும்​போது, “முதலில் விளை​யாட்டு போட்​டிகளில் பங்​கேற்று சிறிய அளவி​லான வெற்​றிகளைப் பெற்​றேன். அதன் பின்​னர் போதிய பணம் கிடைக்​காத​தால் விளை​யாட்டை விட்டு விட்டு கட்​டிட வேலை​யில் சேர்ந்​தேன்.

தினக்​கூலி வேலை​யி​லிருந்து பளுதூக்​கும் விளை​யாட்​டில் சேர்ந்​த​ போது சாதனை படைக்க முடி​யும் என்று நம்​பினேன். தொடக்​கத்​தில் பெரும்​பாலும் தோல்வி​களே கிடைத்​தன. ஒரு சிறந்த பளுதூக்​கும் வீர​ராக வேண்​டும் என்ற என் கனவும், அந்த விளை​யாட்​டில் எனக்​கிருந்த எதிர்​கால​மும் முடிந்​து​விட்​ட​தாகவே தோன்​றியது. அப்​போது நான் இம்​பாலில் எனக்​குக் கிடைத்த வேலை​யைச் செய்தேன்.

அதன் பின்​னர் மீண்​டும் பளுதூக்​குதல் போட்​டிகளுக்​குத் திரும்​பினேன். விடாத முயற்​சி​யால் இப்​போது வெள்​ளிப் பதக்​கம் வென்​றுள்​ளேன்” என்​றார்.

மணிப்​பூர் மாநிலத்​திலிருந்து காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற முதல் வீரர் ரிஷிகண்டா சிங் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இம்​பால் மேற்கு மாவட்​டத்​தி​லுள்ள நகைரங்​பாம் கிராமத்​தில் வளர்ந்த இவருக்கு விளை​யாட்​டு​தான் உலக​மாக உள்​ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: எங்​கள் கிராமத்​தில் நடை​பெற்ற ஹோலி பண்​டிகை​யின் போது நடத்​தப்​பட்ட ஒரு உள்​ளூர் விளை​யாட்டு நிகழ்ச்​சி​யில் எனது ஆசிரியர் ஒரு​வர் என்னை விளை​யாட்​டில் சேரு​மாறு ஊக்​கப்​படுத்​தி​னார். மேலும் இந்​திய விளை​யாட்டு ஆணை​யத்​தில் இணைந்து பயிற்சி பெறு​மாறு கூறி​னார்.

அங்கு எனக்கு விளை​யாட்டு பயிற்சி அளிக்​கப்​படும் என்​றும், பயிற்​சித் திட்​டத்​துக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டால் இலவச உணவு, தங்​குமிடம் கிடைக்​கும் என்​றும் அவர் என்​னிடம் கூறி​னார். மறு​நாளே இம்​பால் சென்​று​விட்​டேன். என் தந்தை ஒரு வாடகை கார் ஓட்​டுந​ராக உள்​ளார். இந்​திய விளை​யாட்டு ஆணை​யம் எப்​படி செயல்​படு​கிறது. எப்​படி ஆணை​யத்​தில் சேர்​வது என்​பது குறித்து எங்​களுக்கு தெரிவிக்​கவோ, வழி​முறை​களைச் சொல்லி வழிகாட்டவோ யாரும் இல்​லை. நான் தனி​யாகவே சென்று சேர்ந்து​விட்​டேன்.

ஆரம்​பத்​தில் குத்​துச்​சண்​டை, கால்​பந்து மற்​றும் பளுதூக்​குதல் ஆகிய மூன்று வெவ்​வேறு விளை​யாட்​டு​களில் பயிற்சி பெற்​றேன். பின்​னர் இறு​தி​யாக பளுதூக்​குதல் பயிற்​சிக்கு என்​னைத் தயார் செய்​தேன். தின​மும் எனது வீட்​டிலிருந்து விளை​யாட்டு மைதானத்​துக்கு சைக்​கிளி​லேயே 40 கிலோமீட்​டர் தூரம் சென்று பயிற்சி பெற்று வந்தேன்.

பயிற்சி பெறு​வதற்​கான வாய்ப்பு கிடைப்​ப​தா​லும், பயிற்​சிக்​குப் பிறகு மைதானத்​தில் உணவு கிடைப்​ப​தா​லும் நான் மிக​வும் அதிர்​ஷ்ட​சாலி என்று நினைத்​தேன். என் பெற்​றோர்​களால் எனக்கு அந்த வசதி​யைச் செய்து தரு​வது எளிதல்ல என்​பது எனக்​குத் தெரி​யும். 2017-ல் சில போட்​டிகளில் வெற்றி பெற்ற பின்​னர் அடுத்த சில ஆண்​டு​கள் எனக்கு எந்த வெற்​றி​யும் கிடைக்​க​வில்​லை.

இதனால் விளை​யாட்​டிலிருந்து வில​கி, தினக்​கூலி வேலைக்​குச் சென்​றேன். சில நாட்​கள் செங்​கற்​கள், கற்​கள், சிமெண்ட் கலவையை சுமந்து தினக்​கூலி​யாக வேலை பார்த்​தேன். சாலை​யோர உணவகத்​தி​லும் வேலை பார்த்​தேன். ஒரு நாளைக்கு 150 அல்​லது 200 ரூபாய் மட்​டுமே கிடைக்​கும். அந்த வரு​மானம் முழு​வதும் எனது தம்​பி​யின் தேவை​களுக்கே செல​விடப்​பட்​டது.

ஓராண்டு கழித்து மணிப்​பூர் பளுதூக்​குதல் சங்​கத்​திலிருந்து எனக்கு அழைப்பு வந்​ததது. அது​தான் எனதுவாழ்க்​கையை மாற்​றியமைத்​தது. பயிற்​சிக்கு பணம் இல்​லாத​தால் தற்​போது பயிற்சி மேற்​கொள்​ள​வில்லை என்று மணிப்​பூர் பளுதூக்​குதல் சங்க நிர்​வாகி சுனிலிடம் தெரி​வித்​தேன்.

வாய்ப்பு கிடைத்​தால் மீண்​டும் பயிற்​சி​யில் ஈடு​படு​வாயா என்று அவர் கேட்​டார். அதற்கு விருப்​பம் தெரி​வித்​தேன். கடந்த சில ஆண்​டு​களாக மேற்​கொண்ட அயராத உழைப்​பு, பயிற்​சி​யால் தற்​போது உங்​கள் எதிரில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற சாம்​பிய​னாக நிற்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here