அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் தவெகவில் இணைந்தனர் – முழு விவரம்

0
23

சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் உள்​ளிட்ட 4 முன்​னாள் அமைச்​சர்​கள் மற்​றும் முன்​னாள் எம்​எல்​ஏக்​கள், மாவட்ட நிர்​வாகி​கள் என 10 ஆயிரம் பேர் அதி​முக​வில் இருந்து விலகி தவெகவில் இணைந்​தனர். அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், எம்​எஸ்​எம். ஆனந்​தன், எஸ்​.வளர்​மதி ஆகியோர் தவெக​வில் இணைந்​தனர்.

இதற்​கான இணைப்பு விழா மாமல்​லபுரத்​தில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது. அமைச்​சரும், கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரு​மான என்​.ஆனந்த், தவெக கட்​சித் துண்டை அணி​வித்து அவர்​களை வரவேற்​றார்.

இந்த நிகழ்ச்​சி​யில் அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் மான்​ராஜ், எம்​.​ராம்​கு​மார், ராஜவர்​மன், சதன் பிர​பாகர், திரு​ஞானசம்​பந்​தன், சுந்​தர்​ராஜன், ராமச்​சந்​திரன், பி.கே.வைர​முத்​து, தமிழ்ச்​செல்​வன் உட்பட தஞ்​சாவூர், திருச்​சி, புதுக்​கோட்​டை, பெரம்​பலூரின் முன்​னாள் மாவட்​டச் செய​லா​ளர்​கள், மாநில, மாவட்ட நிர்​வாகி​கள் அதி​முக​வில் இருந்து விலகி தவெக​வில் இணைந்​தனர்.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​கள் பேசி​ய​தாவது:

முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர்: தேர்​தலுக்கு முன்​பாகவே, தவெக​வுடன் கூட்​டணி அமைக்க வேண்​டும் என்று பழனி​சாமி​யிடம் கடுமை​யாக வலி​யுறுத்​தினோம். ஆனால், தலைமை கேட்​க​வில்​லை. மக்​களின் உணர்​வு​களைப் புரிந்து கொள்​ளாத அதி​முக தலை​மை, இயக்​கத்​தின் கொள்​கைக்கு முரணாக, ‘தீயசக்​தி’ என்றுநாம் அழைக்​கும் திமுக​வுடன் கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முயன்​றது.

அதில் எங்​களுக்கு சிறிதும் உடன்​பாடு இல்​லை. தமிழக மக்​களின் கனவுக்கு இப்​போது​தான் ஒரு தெளி​வான பாதை கிடைத்​துள்​ளது. இனி தவெக வேறு, தமிழகம் வேறு அல்ல. வரவிருக்​கும் அனைத்து தேர்​தல்​களி​லும் தவெக​தான் வெற்றி பெறும்.

முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர்: திமுகவை ஒழிக்க வேண்​டும் என்ற ஒற்றை நோக்​கத்​துக்​காக தொடங்​கப்​பட்டது அதி​முக. பழனி​சாமி​யின் தவறான முடிவு​களால் அதி​முக தள்​ளாடி வரு​கிறது. தலைமைசரி​யான முடிவு எடுக்​கத் தவறி​னால் இயக்​கம் என்ன ஆகும் என்​ப​தற்கு அதி​முகவே சாட்​சி.

அமைச்​சர் ஆனந்த்: அதி​முக​வில் இருந்து விலகி எங்​களுடன் இணைந்​துள்ள உங்​களுக்கு தவெக​வில் மிகச் சிறப்​பான மரி​யாதை கிடைக்​கும். வரும் உள்​ளாட்​சித் தேர்​தலில் நாம் அனைத்து இடங்​களி​லும் வெற்றிபெற வேண்​டும். முதல்​வர் விஜய் ஜூலை 10-ம் தேதி கரூர் மாவட்​டத்​துக்​குச் செல்ல உள்​ளார். அதைத் தொடர்ந்​து, பல மாவட்​டங்​களி​லும் சுற்​றுப் பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா: தவெக ஆட்​சி​யைக் கவிழ்க்க முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி சூழ்ச்சி செய்து வரு​கிறார். கோடிக்​கணக்​கான ரூபாய் கொடுத்து எம்​எல்​ஏக்​களை விலைக்கு வாங்​கப் பார்க்​கின்​றனர். இந்த ஆட்​சி​யைக் கவிழ்க்க முயன்​றால் மொத்த தமிழக​மும் திமுக​வுக்கு எதி​ராகத் திரும்​பும்.

அமைச்​சர் செங்​கோட்​டையன்: அதி​முக​வில் துரோகம் இருக்​கிறது, தவெக​வில் துரோகம் இல்​லை. எம்​ஜிஆர், ஜெயலலிதா நடத்​தி​யது உண்​மை​யான மக்​கள் இயக்​கம். பழனி​சாமி நடத்​து​வது கார்ப்​பரேட் நிறு​வனம். அதி​முகவை தற்​போது ‘சனி’ பிடித்​திருக்​கிறது. தவெக​வில் ‘குரு’ இருக்​கிறது. இவ்​வாறு அவர்​கள் பேசினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here