முன்னாள் அமைச்சரும், தி. மு. க. மாநில தணிக்கை குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜனின் 62-வது பிறந்த நாள் விழா நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சுரேஷ் ராஜனுக்கு, தி. மு. க. வை சேர்ந்த வக்கீல் மாதவன் முருகன், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் குட்டிராஜன், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசோகன், வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் தி. மு. க. நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்பட பலர் சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி, மகன் நீல தமிழரசன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, முன்னாள் கவுன்சிலர் அமலச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.