Home கன்னியாகுமரி செய்திகள் குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை பாதை மூடல்

குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை பாதை மூடல்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணையை தாண்டி தண்ணீா் சென்றது.

இதையடுத்து, தடுப்பணை பகுதியின் குறுக்குச் சாலையை பொதுப்பணித் துறையினா் திங்கள்கிழமை தற்காலிகமாக மூடினா். இதனால், குழித்துறை தபால் நிலைய சந்திப்பு-வெட்டுவெந்நி பகுதிகளுக்கு இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் செல்ல வழியின்றி குழித்துறை சந்திப்பு வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version