பாங்காக் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு

0
15

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி (Pub) ஒன்றில் இன்று (ஜூலை 13) ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்து அந்த நகரின் வடக்கு பகுதியில் உள்ள ‘நா லட்ப்ரோ பப்’-ல் அதிகாலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. அதில் தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றுள்ளனர்.

கேளிக்கை விடுதியின் உள்ளே தீ பற்றி உள்ளது. தீ பிழம்பு கேளிக்கை விடுதியின் முகப்பு கதவு வரை வந்தது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்ததும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து சுமார் முப்பது நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.

சம்பவ இடத்தை தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல், இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தார். மேலும், 63 பேர் இதில் காயமடைந்து உள்ளதாகவும். அதில் 22 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022-ல் தாய்லாந்தில் செயல்பட்ட கேளிக்கை கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்தனர். கடந்த 2009-ல் புத்தாண்டு தினத்தில் பாங்காக் கேளிக்கை கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 66 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here