ஜீ​வாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு

0
28

ஜீவா நடித்திருக்கும் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு அடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கத்தில், ஜீவா நடித்திருக்கும் படம், ‘தகப்பன்’. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு நிறைவு குறித்து ஜீவா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவ்வொரு காட்சியிலும் ஓர் உணர்வு, ஒவ்வொரு கணத்திலும் ஒரு நினைவு. ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. டிசம்பரில் படம் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

“மதுரை பின்​னணி​யில் உருவாகும் இந்தப் படம், ‘தெனாவட்டு’ திரைப்​படத்​துக்​குப் பிறகு, கிராமத்​துப் பின்னணி​யில் ஜீவா நடிக்​குமாகும். அவரது திரைப்​பயணத்​தில் முக்​கிய​மான மற்​றும் வித்​தி​யாச​மான படைப்பாக இப்​படம் அமை​யும்​” என்​று படக்​குழு​வினர்​ தெரி​வித்​திருந்தனர். ​

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here