மைசூரு – சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கிய மசால் வடையில் ‘ஃபெவி க்விக்’

0
43

வந்​தே​பாரத் விரைவு ரயிலில் பயணிக்கு வழங்​கிய மசால் வடை​யில் `ஃபெவி க்விக்’ (உடனடி​யாக ஒட்​டும் பசை) இருந்​த​தால், அந்த பயணி கடும் அதிர்ச்​சி​யடைந்​தார்.

இதையடுத்து உணவை வழங்​கிய கேட்​டரிங் ஒப்​பந்த நிறு​வனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயணி​கள் போர்க்​கொடி தூக்​கினர். சென்னை கொளத்​தூரைச் சேர்ந்​தவர் சேகர். இவர் லயன்ஸ் கிளப்பை சேர்ந்த 150 பேருடன் மைசூரு சென்​று​விட்டு நேற்று மதி​யம் சென்​னைக்கு வந்தே பாரத் விரைவு ரயி​லில் புறப்​பட்​டார். இந்த ரயி​லில் பயணத்​துடன் சிற்​றுண்​டிக்​கும் சேர்த்து ரூ.1,400 கட்​ட​ணம் செலுத்தி இருந்​தார்.

இந்த ரயி​லில் மதி​யம் சுமார் 3 மணி​யள​வில் சிற்​றுண்டி வழங்​கப்​பட்​டது. அதிலிருந்த மசால் வடை​யின் உள்ளே `ஃபெவி க்விக்’ (உடனடி​யாக ஒட்​டும் பசை) இருந்​தது. அதிர்ச்சி அடைந்த அவர், சக லயன்ஸ் கிளப் உறுப்​பினர்​களிடம் தெரி​வித்​தார்.

மேலும் டிக்​கெட் பரிசோதகரிடம் புகார் அளித்​தார். இதையடுத்​து, ரயி​லில் வழங்​கிய சிற்​றுண்​டியை லயன்ஸ் கிளப் உறுப்​பினர்​கள் அனை​வரும் திருப்பி கொடுத்​தனர். சிற்​றுண்டி வழங்​கிய கேட்​டரிங் ஒப்​பந்​த​தா​ரர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கக் கோரி கோஷங்​கள் எழுப்​பினர்.

இதையடுத்​து, டிக்​கெட் பரிசோதர், ரயில் மேலா​ளர் ஆகியோர் விரைந்​து​வந்து அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். தொடர்ந்​து, சேகரிட​மிருந்து புகாரை பெற்​று, சம்​பந்​தப்​பட்ட கேட்​டரிங் நிறுவன ஒப்​பந்​த​தா​ரர் மீது நடவடிக்கை எடுப்​ப​தாக உறு​தி​யளித்​தனர்.

இதுகுறித்​து, சேகர் கூறுகை​யில், “வந்தேபாரத் ரயி​லில் ஐஆர்​சிடிசி ​ அனு​மதி வழங்​கிய ஒப்​பந்த நிறு​வனம்​தான் உணவு, சிற்​றுண்டி தயாரித்து பயணி​களுக்கு விநியோகிக்​கின்​றது. வந்தே பாரத் ரயி​லில் உணவு, சிற்​றுண்​டிக்​கான கட்​ட​ணம் அதி​கம்​தான்.

ஆனால் உணவில் தரமில்​லை. இது முற்​றி​லும் ஒப்​பந்​த​தா​ரர் தவறு​தான். ஒப்​பந்​த​தா​ரர் மீது கடும் நடவடிக்கை எடுக்​க வேண்​டும். ரயில்வே நிர்​வாகம் பயணி​கள் நலனில் உரிய அக்​கறை செலுத்​த வேண்​டும்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here