முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

0
59

முழு பயிர்​கடன் தள்ளுபடி கோரி கோணிப் பைகளை அணிந்து விவ​சா​யிகள் தலை​மைச் செயல​கம் முன் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழக அரசு தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை எனக் கூறி, காவிரி டெல்டா பாசன விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்பைச் சேர்ந்த 40-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் சென்னை தலைமைச் செயல​கம் முன்பு திடீர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

கோணிப் பைகளை அணிந்து நூதன முறை​யில் நடை​பெற்ற போ​ராட்​டத்​தால் அப்​பகு​தி​யில் சிறிது நேரம் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

போராட்​டத்​தில் ஈடு​பட்ட விவ​சா​யிகளை காவல்​துறை​யினர் உடனடி​யாகக் கைது செய்​து, அரு​கில் உள்ள சமு​தாய நலக்​கூடத்​துக்கு அழைத்​துச் சென்று பின்​னர் விடு​வித்​தனர்.

போராட்​டத்​தின் போது செய்​தி​யாளர்​களை சந்​தித்த கூட்​டமைப்​பின் தலை​வர் இளங்​கீரன் கூறுகை​யில், “வேளாண் பட்​ஜெட் விவ​சா​யிகளுக்கு ஏற்​றம் தரும், வாழ்​வா​தா​ரத்தை உயர்த்​தும் பட்​ஜெட்​டாக இல்​லை. முதல்​வர் அளித்த தேர்​தல் வாக்​குறு​தியை தான் நிறைவேற்ற கேட்​கிறோம்.

அடுத்த பிற​வி​யில் விவ​சா​யி​யாக பிறக்க வேண்​டும் என கூறிய​வர் முதல்​வர், அவர் முழு கடன் தள்​ளு​படி என கூறியதை நம்பி வாக்​களித்​தோம், வாக்​குறு​திப்​படி முழு பயிர்​கடன் தள்​ளு​படி செய்ய வேண்​டும், நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500-ம், கரும்​புக்கு ரூ.4500-ம் கொடுப்​ப​தாக கூறினர், ஆனால் கொஞ்​சம் கூட தரவில்​லை. கத்தி படத்​தில் விவ​சா​யத்​தைப் பற்றி நிறைய பேசி​னார். ஆனால் முதல்​வ​ராக எங்​களுக்​கு எது​வுமே செய்​ய​வில்​லை” என்​றார்​

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here