ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக சிவில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்த கௌரிஸ்வரி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈத்தாமொழி போலீசார் சம்பந்தப்பட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














