சிஎஸ்கே பயிற்சியாளர் பதவிக்கு இயன் மோர்கன் செட் ஆகமாட்டார்: கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து

0
25

சிஎஸ்கே அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த மாதம் விலகியிருந்தார். சிஎஸ்கே அணி​யுடன் அவரது 18 வருட பயணம் முடிவடைந்த நிலை​யில் புதிய பயிற்​சி​யாளரை தேடும் பணி​யில் சிஎஸ்கே அணி களமிறங்கி உள்​ளது.

பிளெமிங்​கின் பயிற்​சி​யின் கீழ் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது. மேலும் சாம்​பியன்ஸ் லீக் டி 20 தொடரில் 2 முறை கோப்​பையை கைப்​பற்​றி​யிருந்​தது. எனினும் கடந்த 3 சீசன்​களாக சிஎஸ்கே அணி​யால் பிளே ஆஃப் சுற்றை எட்​ட​முடி​யாமல் போனது. இதன் காரண​மாக பிளெமிங், பயிற்​சி​யாளர் பதவி​யில் இருந்து விலக நேரிட்​டது.

இந்​நிலை​யில் சிஎஸ்கே அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ராக இங்​கிலாந்து அணி​யின் முன்​னாள் கேப்​டன் இயன் மோர்​க​னின் பெயர் பரிசீலிக்​கப்பட வாய்ப்பு உள்​ளது என இந்​திய அணி​யின் முன்​னாள் வீர​ரான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் தெரி​வித்து இருந்​தார். இந்​நிலை​யில் இந்த சாத்​தி​யக்​கூறை முன்​னாள் வீர​ரான கிருஷ்ண​மாச்​சாரி ஸ்ரீகாந்த் நிராகரித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர், தனது யூடியூப் சானலில் கூறிய​தாவது: நான் நிச்​சய​மாக இயன் மோர்​க​னைத் தேர்ந்​தெடுக்க மாட்​டேன். அவர், சிறந்த பேட்​ஸ்​மே​னாக​வும், இங்​கிலாந்​துக்கு சிறந்த கேப்​ட​னாக​வும் இருந்​திருக்​கலாம். ஆனால், ஒரு பயிற்​சி​யாள​ராக அவரை ஒரு வாய்ப்​பாகக்​கூட என்​னால் ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​ட​னாக இருந்​த​போது கூட அவர் பெரி​தாக எது​வும் சாதிக்​க​வில்​லை. அவர், வர்​ணனையாள​ராக செயல்​படு​வதோடு நிறுத்​திக் கொள்​வதே சிறந்​த​தாக இருக்​கும்.

இதே​போன்று பிரெண்​டன் மெக்​கல்​லமை தலை​மைப் பயிற்​சி​யாள​ராக நியமிக்​காமல் இருப்​பதும் சிஎஸ்கே அணிக்கு நல்​லது​தான். மோர்​கன் மற்​றும் மெக்​கல்​லம் ஆகிய இரு​வரை​யுமே சிஎஸ்கே அணி நிர்​வாகம் வேண்​டாம் என்று சொல்​லி​விட வேண்​டும். மிஸ்​டர் கிரிக்​கெட் என அழைக்​கப்​படும் மைக்​கேல் ஹஸ்ஸி கூடவே இருக்​கும்​போது சிஎஸ்​கே-வுக்கு வெளி​யில் இருந்து யாரும் பயிற்​சி​யாள​ராக தேவை​யில்லை.

மைக்​கேல் ஹஸ்​ஸியே தலை​மைப் பயிற்​சி​யாள​ராக தேர்​வாக வேண்​டும். இவ்வாறு ஸ்ரீகாந்த்​ கூறியுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here