சித்தி இட்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, பரிதாபங்கள் டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’.
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஹரி எஸ்.ஆர். இசை அமைத்துள்ளார். ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் இந்தியாவில் வெளியிடுகிறார். வித்தியாசமான ஃபேன்டஸி திரைப்படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
“கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள், நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேன்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என படக்குழு தெரிவித்துள்ளது.















