குறும்படங்களுக்கு ஆதரவளிக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் முடிவு

0
109

மணிமேகலை, ராம்ஜி, நாடக நடிகர் காளிதாஸ் உள்பட பலர் நடித்துள்ள குறும்படம், ‘லிட்டில் விங்ஸ்’. தேசிய விருது பெற்ற இப்படத்தை நவீன் இயக்கியுள்ளார். மருது ஒளிப்பதிவு செய்துள்ளார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்றுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் ராஜு முருகன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.

எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்தப் படத்தின் கதை சொல்கிற விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அதன் பின் இருக்கும் ஆழமான கருத்துகள் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

சினிமாவில் இன்று நிறைய விஷயங்கள் மாறியிருக்கிறது. திறமைசாலிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கவும் முயன்று வருகிறோம். அப்படித்தான் இக்குறும்படத்தை வழங்குகிறோம்.

வருவாய் அடிப்படையில் இன்றி புது திறமைசாலிகளை அடையாளம் காணும் தளமாக இதைப் பார்க்கிறோம். அந்த வகையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தனித்துவ இசை ஆல்பங்களுக்கு ஆதரவளிக்கிறது. தற்போது குறும்படங்களுக்கும் ஆதரவளிக்கத் தொடங்கி இருக்கிறோம். பல திறமைசாலிகளின் படைப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என நம்புகிறேன்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here