சிறுவன் தோளில் பாய்ந்த கம்பியை அகற்றி மருத்துவர்கள் சாதனை

0
16

குஜராத்தின் சூரத்​தி​லுள்ள மதர​சா​வில் பிஹாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நாஜிஷ் படித்து வந்​தான். வகுப்பு முடிந்​ததும், அவன் தனது நண்​பர்​களு​டன் அரு​கில் உள்ள பள்​ளி​வாசலின் 3-வது மாடிக்கு விளை​யாடச் சென்​றுள்​ளான்.

அப்​போது, கட்​டிடத்​தின் மேல் தளத்​திலிருந்து பக்​கத்து கட்டிடத்துக்​குத் தாவ முயன்​ற​போது தவறிக் கீழே விழுந்​தான். அதில், அங்​கிருந்த கூர்​மை​யான இரும்​புக் கம்பி அவனது தோள்​பட்​டை​யில் குத்​தி, வாய் வழி​யாக வெளியே வந்​தது.

இதைப் பார்த்த அக்​கம் பக்​கத்​தினர் உடனடி​யாகக் கம்​பியைத் துண்​டித்​து, வாயில் கம்பி நீட்​டிய நிலை​யிலேயே சிறு​வனை சூரத் அரசு மருத்துவமனைக்​குக் கொண்டு சென்​றனர். அங்கு முதலுதவி அளிக்​கப்​பட்ட பிறகு, அவனது உட்​புறக் காயங்​களைக் கண்​டறிய சிடி ஸ்கேன் பரிசோதனை செய்​யப்​பட்​டது.

வாயில் கம்பி இருந்​த​தால் மயக்க மருந்து கொடுப்​பது சவாலாக இருந்​தது. இருப்​பினும், மயக்​க​வியல் நிபுணர்​கள் சுவாசப் பாதையைச் சீரமைத்த பின், பிளாஸ்​டிக் மற்​றும் காது-மூக்​கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்​கள் தீவிர அறுவை சிகிச்சை​யில் ஈடு​பட்​டனர்.

ஒரு மணி நேரம் நடை​பெற்ற இந்​தச் சிகிச்​சை​யில், ரத்த நாளங்​களுக்​குப் பாதிப்​பில்​லாமல் கம்பி பாதுகாப்​பாக அகற்​றப்​பட்​டு, காயங்​களுக்​கும் தையலிடப்​பட்​டது. தற்போது தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருக்​கும் சிறு​வன் நாஜிஷ் உடல்​நிலை சீராக உள்​ள​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம்​ தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here