மணவாளக்குறிச்சி அருகே வழிப்பாதை தகராறு: இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

0
24
மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று பகுதியில் வழிப்பாதை பிரச்சினையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்தனர். நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று பகுதியில் வழிப்பாதை பிரச்சினை காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பு புகார்களின் பேரில் 4 பேர் மீது மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று பகுதியில் வழிப்பாதை பிரச்சினையால் முன்விரோதம் கொண்டிருந்த துரை (45), ராஜேந்திரன் (63) தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் துரை, ராஜேந்திரன் இருவரும் காயமடைந்து குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருதரப்பு புகார்களின் பேரில் துரை, ராஜன், ராஜேந்திரன், சாந்தா ஆகிய 4 பேர் மீது மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here