டிங் லிரென் – குகேஷ் 4-வது சுற்றில் இன்று மோதல்

0
291

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார்.

14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது. 3-வது சுற்றில் குகேஷ் 37-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 3 சுற்றுகளின் முடிவில் குகேஷ், டிங் லிரென் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர். தொடரின் 4-வது நாளான நேற்று ஓய்வு நாளாக அமைந்திருந்தது. இந்நிலையில் இன்று 4-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு இருவரும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here