Home மாநில செய்திகள் திருவான்மியூரில் பள்ளி, கோயில் அருகே விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை

திருவான்மியூரில் பள்ளி, கோயில் அருகே விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை

0

திரு​வான்​மியூரில் விதி​முறை​களை மீறி செயல்​பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்​தர​மாக மூட வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்​துள்​ளது.

பொது​மக்​கள் நலன் கருதி வழி​பாட்​டுத்தலங்​கள், கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் பேருந்து நிலை​யங்​கள் அரு​கி​லிருந்து 500 மீட்​டர் வரை அமைந்​துள்ள டாஸ்​மாக் கடைகளை 2 வாரத்​துக்​குள் மூடு​மாறு முதல்​வர் விஜய் கடந்த 12-ம் தேதி உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, தமிழகத்​தி​லுள்ள 4,765 டாஸ்​மாக் கடைகளில் வழி​பாட்​டுத் தலங்​கள் அரு​கிலுள்ள 276 கடைகள், கல்வி நிறு​வனங்​கள் அரு​கிலுள்ள 186 கடைகள் மற்​றும் பேருந்து நிலை​யங்​கள் அரு​கிலுள்ள 255 கடைகள் என மொத்​தம் 717 டாஸ்​மாக் கடைகளை மூடும் பணி நடை​பெற்று வரு​கிறது.

இது​வரை 436 டாஸ்​மாக் கடைகளும் அவற்​றுடன் இணைந்​துள்ள மதுக்​கூடங்​களும் மூடப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில், மூடப்​பட்ட மது​பானக் கடைகளில் சில மீண்​டும் திறக்​கப்​பட்​டு, வழக்​கம்​போல் இயங்கி வரு​வ​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

குறிப்​பாக திரு​வான்​மியூர் எல்​.பி சாலை​யில் உள்ள டாஸ்​மாக் கடை (எண் 898) முதல்​வரின் அறி​விப்​புக்கு பின்​னர் மூடப்​பட்​டு, தற்​போது மீண்​டும் திறக்​கப்​பட்​டுள்​ளது.

முதல்​வர் தின​மும் நீலாங்​கரையி​லிருந்து தலை​மைச் செயல​கம் செல்​லும் வழி​யிலேயே இந்​தக் கடை உள்​ளது. எனவே, இதை மீண்​டும் மூட வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்​துள்​ளது.

இதுகுறித்து சமூக ஆர்​வலர் உன்​னிகிருஷ்ணன் கூறும்​போது, ‘திரு​வான்​மியூர் எல்​.பி சாலை​யில் (ஜெயந்தி சிக்​னல்) உள்ள டாஸ்​மாக் கடை,  சங்கர வித்​யாஷ்ரமம் பள்​ளியி​லிருந்து 250 மீட்​டரில் உள்​ளது.

மேலும், திரு​வான்​மியூர் பேருந்து நிலை​யத்​திலிருந்து 300 மீட்​டர், ரங்​க​நாத​புரம், கால்​வாய் சாலை​யில் அமைந்​துள்ள  கிருஷ்ணா மந்​திரம் கோயி​லிலிருந்து 400 மீட்​டர் தொலை​வில் உள்​ளது.

முதல்​வரின் அறி​விப்​பையடுத்​து, இந்த டாஸ்​மாக் கடை கடந்த 15-ம் தேதி மூடப்​பட்​டது. இதனால் அப்​பகுதி மக்​கள் நிம்​ம​தி​யடைந்​தனர். இந்​நிலை​யில் மறு​நாள் மீண்​டும் வழக்​கம்​போல் திறக்​கப்​பட்​டது.

இது மிக​வும் வேதனை அளிக்​கிறது. எனவே, 500 மீட்​டர்தூர வரம்​புக்​குள் வரும் இந்த டாஸ்​மாக்கை நிரந்​தர​மாக மூட வேண்​டும்” என்​றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version