Home மாநில செய்திகள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு ரூ.5.80 லட்சம் நிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு ரூ.5.80 லட்சம் நிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

0

ஒலிம்பிக்கில் பங்​கேற்​கும் ஆர்​வ​முடைய வீரர், வீராங்​க​னைக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா ரூ.5.80 லட்​சம் நிதி வழங்​கி​னார்.

இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: விளை​யாட்​டில் ஆர்​வ​முள்ள வீரர், வீராங்​க​னை​களை கண்​டறிந்து சாதனை​யாளர்​களாக மாற்ற தற்​போது பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில் காது கேட்​கும் திறன் குறைந்​தவர்​களுக்​கான ஒலிம்​பிக்​கில் பங்​கேற்க தமிழகத்​தைச் சேர்ந்த தடகள வீராங்​கனை சமீஹா பர்​வீன் மற்​றும் தேசிய அளவி​லான போட்​டிகளில் பங்​கேற்ற நீச்​சல் வீரர் அபிஷேக் ஆகியோர் நிதி உதவி கோரி​யிருந்​தனர்.

இவர்​கள் பல்​வேறு பயிற்​சிப் போட்​டிகளில் கலந்​து​கொள்​ள​வும், தேவை​யான உபகரணங்​களை வாங்​க​வும், ஊட்​டச்​சத்து மேம்​பாட்​டுக்கு உதவும் வகை​யிலும் தலைசிறந்த விளை​யாட்டு வீரர்​களுக்​கான சிறப்பு உதவித் தொகைத் திட்​டத்​தின் கீழ் சமீஹா பர்​வீனுக்கு ரூ. 3 லட்​சம், அபிஷேக்​குக்கு ரூ.2.80 லட்​சம் வழங்​கப்​பட்​டது.

விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை தொடர்​பான கோரிக்​கைகள் குறித்து விளை​யாட்டு வீரர்​கள், விளை​யாட்டு சங்க நிர்​வாகி​கள் எவ்​வித சிரம​முமின்றி நாள்​தோறும் காலை 7 மணி​முதல் 10 மணிவரை சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் என்​னைச் சந்​திக்​கும் வகை​யில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

விளை​யாட்டு வீரர் மற்​றும் வீராங்​க​னை​கள் பல்​வேறு கோரிக்​கைகள் குறித்து மனு அளித்​துள்​ளனர். இவற்​றில் பெரும்​பாலான மனுக்​களின் மீது விளை​யாட்​டுத் துறை அலு​வலர்​கள் உடனுக்​குடன் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். இவ்​வாறு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கூறி​யுள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version