Home மாநில செய்திகள் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: கைதான இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: கைதான இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

0

கோவையி்ல் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் டிச.4-ம் தேதி அறிவிக் கப்படும் என நீதிபதி அறிவித் துள்ளார்.

கோவை சூலூரைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் கடந்த மே 21-ம் தேதி மாயமானார். அன்றைய தினம் இரவு கண்ணம்பாளையம் குளம் அருகேயுள்ள தென்னந்தோப்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்தனர்.

இதுதொடர்பாக கட்டிடத் தொழிலாளி கார்த்தி (33), அவருக்கு உதவிய நண்பர் மோகன் (31) ஆகி யோரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி ஹரி ஹரன் வழக்கை விசாரித்தார். அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நவ. 27-ல் தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்காக, கைது செய்யப்பட்ட கார்த்தி, மோகன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் டிச.4-ம் தேதி தெரிவிக்கப்படும் என நீதிபதி அறி வித்தார்.

அத்துடன் கார்த்தி, மோகன் ஆகியோரின் குற்றப் பின்னணி விவரம், அவர்களின் குடும்ப பின்னணி ஆகியவற்றை சமூக நலத்துறை மூலம் அறிக்கையாக டிச.4-ம் தேதி சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இவ் வழக்கில் 68 அரசுத் தரப்பு சாட்சிகள், 2 எதிர்த் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டன/ 221 சான்றாவணங்கள் மற்றும் 10 சான்றுப் பொருள்கள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன’’ என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version