நே​பாள பெரு​வெள்​ளத்​தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது

0
24

நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்​ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்​களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்​கும் மேற்​பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அங்கு நேற்று 7-வது நாளாக மீட்​புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. இது​வரை 1,000-க்​கும் மேற்​பட்ட உடல்​கள் மீட்கப்பட்டு உள்​ளன. 4,400-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. இதில் 583 பேர் வெளி​நாட்​டினர் ஆவர். அவர்​களில் பெரும்​பாலானோர் இந்​தி​யர்​கள் ஆவர். காணா​மல் போனவர்​களை தேடும் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது.

பெரு​வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் சுமார் 40-க்​கும் மேற்​பட்ட பாலங்​கள் உடைந்​துள்​ளன. அங்கு தற்​காலிக பாலங்​களை அமைக்க இந்​தி​யா​வின் உதவியை நேபாள அரசு கோரி​யுள்​ளது. இந்​திய பொறி​யாளர்​கள் குழு நேபாளத்​தில் முகாமிட்டு தற்​காலிக பாலங்​களை அமைத்து வரு​கிறது. மேலும் நேபாளத்​தின் நீர்​மின் திட்​டங்​களில் பணி​யாற்​றிய சுமார் 900 தொழிலா​ளர்​களை காண​வில்​லை.

இரு இந்தியக் குழுக்​கள் நேபாளத்​தில் முகாமிட்டு சுரங்க மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றன. நேபாள வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் காத்​மாண்​டு​வில் நேற்று கூறும்​போது, “பெரு​வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் இருந்து 11,800 பேரை பத்​திர​மாக மீட்டு உள்​ளோம். 4,400-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது.

ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். மரபணு சோதனை மூலம் உறவினர்​களிடம் உடல்​கள் ஒப்படைக்கப்படுகின்​றன. இந்த பணிக்கு இந்​தி​யா, சீனா, சிங்கப்பூர் உள்​ளிட்ட நாடு​கள் உதவி செய்து வரு​கின்​றன” என்று தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here