தெலுங்கு படம் மூலம் நடிகராக டேவிட் வார்னர் அறிமுகம்!

0
354

தெலுங்கில் ‘ராபின்ஹுட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் ஆஸ்திரேலியே கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.

வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா, லால், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராபின்ஹுட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் மார் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

ஹைதராபாத்தில் ‘கிங்ஸ்டன்’ தெலுங்கு பதிப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘ராபின்ஹுட்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பதால், அப்படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவிஷங்கர் பேசும்போது, “ராபின்ஹுட் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார் டேவிட் வார்னர்” என்று குறிப்பிட்டார். ‘ராபின்ஹுட்’ அப்டேட் வேண்டும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட போது இதனை குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியாவிலும் பிரபலமானார். தற்போது ‘ராபின்ஹுட்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நடிகராகவும் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here