‘லெனின் பாண்டியன்’ படத்துக்காக 4 நாட்கள் வெயிலில் நின்ற தர்ஷன்

0
24

சிவாஜி கணேசனின் பேரன் தர்​ஷன் கணேசன் நடிக​ராக அறி​முக​மாகும் திரைப்​படம், ‘லெனின் பாண்​டியன்’. டி.டி.​பாலச்​சந்​திரன் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரத்தா ராவ் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். நாளை மறு​நாள் (செப்​.25) வெளி​யாகும் இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசை அமைத்​துள்​ளார். சத்​யஜோதி பிலிம்ஸ் சார்​பில் செந்​தில் தியாக​ராஜன், அர்​ஜுன் தியாக​ராஜன் தயாரித்​துள்ள இப்​படத்தை டி.ஜி.​தி​யாக​ராஜன் வழங்​கு​கிறார்.

இதில் நடித்​தது பற்றி தர்​ஷன் கூறும்​போது, “புனே​வில் நடிப்​புப் பயிற்சி பெற்​று​விட்டு சில விளம்பர படங்​களில் நடித்​தேன். நாடகங்​களி​லும் நடித்து வந்​தேன். திரைப் படத்​துக்​காக சில ஆடிஷன்​களில் நிராகரிக்​கப்​பட்​ட​தால் என்னை இன்​னும் தயார்​படுத்த வேண்​டிய நிலை இருந்​தது. பிறகு மீண்​டும் பயிற்சி பெற்​றேன். சத்​யஜோதி பிலிம்ஸ் என்னை சினி​மா​வில் அறி​முகப்படுத்த முடிவு செய்​தது. அதன்​படி இந்​தப் படத்​தின் கதையைக் கேட்​கச் சொன்​னார்​கள்.

இதில் ஒரு நடிக​னாக, என் திறமையை நிரூபிக்க போது​மான வாய்ப்பு இருந்​தது. அதி​காரத்​துக்கு எதி​ராக சாதாரண மனிதர்​கள் 2 பேர் போராடு​வது​தான் படத்​தின் கதை. இதில் கங்கை அமரன், ரோஜா ஆகியோ​ருடன் நடித்​தது சிறந்த அனுபவத்​தைத் தந்​தது. போலீஸ் கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளேன். அதற்​காக நிஜ​மான போலீ​ஸார் எப்​படி இருப்​பார்​கள் என்​பதை மதுரை​யில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்​றுக்​குசென்று நாள் முழு​வதும் அமர்ந்து கவனித்​தேன். அது கதா​பாத்​திரத்​துக்கு வலு சேர்த்​தது.

மதுரை அருகே நடக்​கும் கதை என்​ப​தால் உடல் இயல்​பாக வேண்​டும் என்​ப​தற்​காக நான்கு நாட்​கள் வெயி​லில் நின்​றேன். மதுரை ஸ்லாங்கில் பேசப் பயிற்சி எடுத்​தேன். இப்​போது படத்​தில் பார்க்​கும் போது எனக்கு நானே வித்​தி​யாச​மானவ​னாகத் தெரி​கிறேன். அடுத்து கதைகள் கேட்​டுக் கொண்​டிருக்​கிறேன். வித​வித​மான கதா​பாத்​திரங்​களி​லும்​ மல்​டி ஸ்டார்​ஸ்​ படங்களில்​ நடிக்​கவும்​ ஆசை இருக்​கிறது” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here