கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

0
131

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நாளை நடைபெறுகிறது. இதில் புதிய கூட்டணி பெயர், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

தவெக ஆட்சி அமைத்த பிறகு, கூட்டணி கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ம் தேதி (நாளை) சென்னையை அடுத்த கோவளத்தில் தவெக தலைவரும், முதல் வருமான விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசியலில் எதிர்கால திட்டங்கள், பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டணி ஆட்சி எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், சிறப்பாக நல்ல முறையில் செயல்படுவதற்காக, ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது.

இதுதொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “முதல்வர் விஜய், ஊழல் இல்லாத, நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு கொடுக்க உறுதியாக இருக்கிறார். அதனால், கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடோ, பிரச்சினையோ ஏற்படக்கூடாது என முதல்வர் விரும்புகிறார். அதற்காகவே கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது” என்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here