Home தேசிய செய்திகள் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ் கூட்டணி | தேர்தல் முடிவுகள் 2026

கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ் கூட்டணி | தேர்தல் முடிவுகள் 2026

0

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 90+ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் இக்கூட்டணி கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 92 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆகியவை இந்த தேர்தலில் பிரதான அணிகளாக களமிறங்கின.

மொத்​தமுள்ள 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27 தொகுதிகளில் போட்​டி​யிட்டது. இதர தொகு​தி​கள் கூட்டணி கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்டன.

இடது ஜனநாயக முன்ன​ணி சார்பில் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிட்டது. இதர தொகு​தி​களில் கூட்​டணி கட்​சிகள் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 115 தொகு​தி​களில் போட்டியிட்டது. இதர தொகு​தி​கள் அதன் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்டன.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 15,465 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 93 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.

அருதிப் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90க்கும் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version