சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு

0
276

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

வங்​கக்​கடலில் நிலவும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்​கால் – மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்​கக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்​களில் இன்றும், 7 மாவட்டங்களில் நாளை​யும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “மேக சுழற்சியைக் காணும்போது மீண்டும் நிலைமை தீவிரமடைவதாகவே தெரிகிறது. காற்றின் வேகம் 30 நாட்ஸ் என்றளவை நெருங்குகிறது. பொதுவாக காற்றின் வேகம் 35 நாட்ஸ் என்றளவில் இருந்தால் அது புயலாக அறிவிக்கப்பட்டு பெயர் வழங்கப்படும். காற்று மேலும் வலுப்பெற்று 40 முதல் 45 நாட்ஸ் என்று வலுப்பெறலாம். காற்றில் சிக்கல் இல்லை. மழையில் தான் சிக்கல்.

கவனிக்கப்பட வேண்டிய அளவில் மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. மேகக் குவியல்கள் புதிதாக உருவாவதால் மதியம், மாலை, இரவு என படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், மரக்காணம் கடலோரப் பகுதிகளிலும் இன்று (நவ.29), நாளை (நவ.30) மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் கவனம் தேவை.” எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரம்: “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்கிறது. இது தற்போது சென்னையிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 360 கிமி தொலைவிலும், நாகையில் இருந்து 310 கிமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் – புதுச்சேரி கடற்க்ரையை ஒட்டி காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாகவே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்திலிருந்து 75 கிமீ வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.” என்று இன்று காலை 5,30 மணிக்கு வெளியிடப்பட்டு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here