நடிகை ட்விஷா மரணத்தில் ஓய்வு பெற்ற நீதிப​தியான மாமியாரை கைது செய்தது சிபிஐ

0
32

தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்​மச்​சாவு வழக்​கில் அவரது மாமி​யாரும், ஓய்வு பெற்ற நீதிப​தி​யு​மான கிரி​பாலா சிங்கை சிபிஐ அதி​காரி​கள் நேற்று கைது செய்​தனர்.

தெலுங்கு நடிகை​யான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்​டில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். இது தொடர்​பாக வரதட்சணை கொடுமை மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டிய​தாக ட்விஷா​வின் கணவரும் வழக்​கறிஞரு​மான சமரத் சிங், முன்​னாள் மாவட்ட நீதிப​தி​யான ட்விஷா​வின் மாமி​யார் கிரி​பாலா சிங் ஆகியோர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதற்​கிடை​யில் இந்த வழக்கை மாநில அரசு கையாளும் விதம் குறித்து ட்விஷா​வின் பெற்​றோர் கூறிய தொடர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த வழக்கை உச்ச நீதி​மன்​றம் தாமாக முன் வந்து விசா​ரணைக்கு எடுத்​துக்​கொண்​டது. இதனிடையே தலைமறை​வாக இருந்த ட்விஷா​வின் கணவர் சமரத் சிங் ஜபல்​பூரில் கடந்த வாரம் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் முன்​னாள் நீதிப​தி​யும், ட்விஷா​வின் மாமியாருமான கிரி​பாலா சிங்​கிடம் விசா​ரணை நடத்த போபாலில் உள்ள அவரது வீட்​டுக்கு நேற்று சிபிஐ அதி​காரி​கள் குழு சென்​றது. இதைத் தொடர்ந்து அவரிடம் சிபிஐ அதி​காரி​கள் நீண்ட நேரம் விசா​ரணை நடத்​தினர். அப்​போது அதி​காரி​கள் கேட்ட கேள்வி​களுக்கு கிரி​பாலா சிங் பதில் அளித்​த​தாக​வும், விசாரணைக்கு முழு ஒத்​துழைப்பு தந்​த​தாக​வும் சிபிஐ வட்​டாரங்ள் தெரி​வித்​தன. விசா​ரணை​யின் முடி​வில் நேற்று மாலை கிரி​பாலா சிங்​கை, சிபிஐ அதி​காரி​கள் கைது செய்​தனர்.

இதனிடையே, இந்த வழக்​கில் கிரி​ பாலா சிங், முன்ஜாமீன் மனுவைப் பெற்​றிருந்​தார். இந்​நிலை​யில் கிரி ​பாலா சிங்​கின் முன்ஜாமீன் மனுவை நேற்று முன்​தினம் மத்​தி​ய பிரதேச உயர் நீதிமன்​றம் ரத்து செய்​திருந்​தது. முன்​ ஜாமீன் ரத்​தான மறு​நாளே ஓய்வு பெற்ற நீதிபதி கிரி​பாலா சிங் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இதைத் தொடர்ந்து அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி காவலில் எடுத்​து வி​சா​ரிக்​க சிபிஐ அதி​காரி​கள்​ திட்​டமிட்​டுள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here