Google search engine
நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராஜவேல் கூறும்போது, "முதல் படம் எடுப்பது சவாலான விஷயம்....
சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. ‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரித்தால், “ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக...
இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டி, கருத்து தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இதில் ‘மண்டேலா’ படத்துக்காக தேசிய விருது வென்றுள்ளார். தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான கதையினை இறுதி செய்து வருகிறார். இப்படத்தினை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ், மடோன் அஸ்வின், ரத்னகுமார், சந்துரு உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்கள். தற்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில்...
‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில்...
மாரீசன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன், “‘மாரீசன்’ படத்தைப் பார்த்தேன். இது நகைச்சுவைக்கும், மனித உணர்வுகளுக்கும் இடையே சிரமமின்றி நடனமாடும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், படக்குழுவினரைப் பாராட்டவும் வைத்தது. இந்த மகிழ்ச்சியான படைப்புக்காக படக்குழுவினரை வாழ்த்த அவர்களுடன் ஓர் அற்புதமான...
ரஜினியை வில்லனாக காட்ட நினைத்த கதை குறித்து பேட்டி ஒன்றில் விவரித்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு முன்பாக ரஜினி வைத்து வேறொரு கதையை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். அது ஏன் நடக்கவில்லை என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ கதைக்கு முன்பு ரஜினிக்காக வேறொரு கதை...
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெட்ரா படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது. இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதன் 3-ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்த ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. சாம்...
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’, ‘அரண்மனை 3’. ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராஷி கண்ணா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் இணைந்துள்ளார். ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தைத் தொடர்ந்து பவன் கல்யாண் நடிக்கும் படம் இது. இதை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். ஸ்ரீலீலா, கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ராஷி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு...
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படமான ‘காந்தாரா’, கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிகஎதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது. அதில் பேசும் ரிஷப் ஷெட்டி,...