Google search engine
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ...
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ள தகவல் குறித்து பார்ப்போம். ”பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட மற்றும்...
இ​ராக்​கில் வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 61 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து குறித்து விசா​ரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. கிழக்கு இராக்​கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்​துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்​கப்​பட்​டது. 5 தளங்​களைக் கொண்ட அதில் உணவகம், சூப்​பர் மார்க்​கெட் உள்​ளிட்​டவை இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில், புதன்​கிழமை இரவு அந்த வணிக வளாகத்​தில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து...
 ​பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், ராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும்...
கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், 1,000-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில், 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் வியட்​நாம் நாட்டை சேர்ந்​தவர்​கள். 27 பேர் சீனர்​கள், 75 பேர் தைவானை சேர்ந்​தவர்​கள். உள்​நாட்​டைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிட​மிருந்து கணினிகள், மொபைல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த அப்டேட்டை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும், கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது. அதை மறைக்கும் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால்...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசிபிக் கடலில் பத்திரமாக இறங்கியது. தனியார் நிறுவனமான அக்ஸியம் ஸ்பேஸ், அமெரிக்கவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலத்தை அனுப்பின. இதில் இந்திய வீரர் ஷுபன்ஷு...
 ரஷ்யா - உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக நீடித்து வரு​கிறது. அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி​யில் பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப் இரு நாடு​கள் இடையே போரை நிறுத்த சமரச முயற்​சிகளை தொடங்​கி​னார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெற​வில்​லை. இந்​நிலை​யில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அடுத்த 50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது...
சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது. ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர...
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9...