Google search engine
‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ‘ஏழு கடல் ஏழு மழை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். அதைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம், ‘பறந்து போ’. இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் மேற்கொண்டுள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ராம்...
எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்தை இயக்கியவர், விக்கி. அடுத்து ‘கூரன்’ என்ற படத்தைத் தயாரித்தார். இவர் இப்போது ‘வீரசிங்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஈழப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நடித்துள்ளனர். இதுபற்றி இயக்குநர் விக்கியிடம் கேட்டபோது, “திரைப்பட விழாக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படம் அரசியல் நையாண்டியை மையமாகக் கொண்டது. ‘வீரசிங்கம்’ என்ற கேரக்டரை பற்றிய இந்தக் கதையில் லக்‌ஷன், இளங்கோ ஆகியோர் நடித்துள்ளனர். லைவ்...
உன்னி முகுந்தனின் பான் இந்தியா படமான, ‘மார்கோ’வை தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘கட்டாளன்’. பால் ஜார்ஜ் இயக்கும் இதில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர், மலையாளத்தில் வெற்றி பெற்ற அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு, ஆர்டிஎக்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார். த்ரில்லர் படமான இதன் முதல் தோற்ற போஸ்டர் வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தப்...
சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், தொழில்நுட்பம் அதிகம் வளராத நேரத்தில், சிறந்த லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவின் மூலம் சில ஒளிப்பதிவாளர்கள் கவனிக்கப்பட்டனர். அதில் இருவர், ஆங்கிலோ - இந்திய ஒளிப்பதிவாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்கஸ் பார்ட்லி (Marcus Bartley) மற்றும் ஆடி இரானி (Adi Irani). இதில் மார்கஸ் பார்ட்லி, பாதாள பைரவி (1951), மிஸ்ஸியம்மா (1955), மாயா பஜார் (1957), செம்மீன் (1965) உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு...
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது....
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி பிரிவு விவகாரத்தில் தன் மீது தொடுக்கப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் பாடகி கெனிஷா. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைத்து வசவாளர்களுக்கும்: கெனிஷாவின் வழக்கறிஞர் குழுவில் இருந்து” என்று தலைப்பிட்டு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பாடகி கெனிஷா ஆன்லைனில் தொடர்ச்சியாக கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள்...
இதில் பவ்யா தரிகா, ராதாரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளனர். காமெடி ஹாரர் படமான இது, வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நீதியரசர் எஸ்.கே. கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை...
கேஜெஆர் ஸ்டூடியோஸ் சார்பில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட சில படங்களைத் தயாரித்தவர் கேஜெஆர் ராஜேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘அங்கீகாரம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜேபி. தென்பாதியான் இயக்குகிறார். ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் - அஜித் பாஸ்கர் - அருண்முருகன் இணைந்து தயாரிக்கின்றனர். இதில், சிந்தூரி விஸ்வ நாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன் ராம்...
ன்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இளையராஜாவின் பயோபிக்கில அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை கதையிலும் தனுஷ் நடிக்கிறார். இதை அபிஷேக் அகர்வால், பூஷன்குமார், கிருஷ்ணன் குமார், அனில் சுங்கரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கேன்ஸ் பட விழாவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். இதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார்....
மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்), விக்கி (சி.ஆர். ராகுல்), புகழ் (ராஜசிவன்) மூவரும் நண்பர்கள். இவர்களுக்குத் தனியாக மருந்தகம் ஒன்றைத் தொடங்கி முன்னேற வேண்டும் என்பது ஆசை. அதற்காகக் கடன் வாங்கியும் நகைகள் மற்றும் இடத்தை விற்று ரூ.6 லட்சம் சேர்க்கிறார்கள். அந்த பணம் திருடு போய்விட, போலீஸில் புகார் செய்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் கனவை அடைய முடிந்ததா? அதற்கு என்ன செய்கிறார்கள்?...