Home விளையாட்டு செய்திகள் உருகுவே அணியை மிரளவிட்டது கேப் வெர்டே: 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது |...

உருகுவே அணியை மிரளவிட்டது கேப் வெர்டே: 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது | FIFA WC 2026

0

உல​கக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் மியாமி கார்​டனில் நேற்று ‘ஹெச்’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான உருகுவே , அறிமுக அணி​யான கேப் வெர்டேவை சந்​தித்​தது. 21-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணி முதல் கோலை அடித்​தது.

கேப் வெர்டே அணி​யின் வீரர் கெவின் பினா 30 அடி தூரத்​தில் இருந்து ஃப்​ரீ-கிக் மூலம் அடித்த பந்து உரு​குவே அணி​யின் தடுப்பு அரண்​களை கடந்து கோல்​கீப்​பர் முஸ்​லெ​ராவை ஏமாற்றி நேராக கோல் வலை​யின் கீழ் கார்​னரை துளைத்​தது. உலகக் கோப்பை வரலாற்​றில் கேப் வெர்டே அணி பதிவு செய்த முதல் கோலாக இது அமைந்​தது. இதனால் அந்த அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

44-வது நிமிடத்​தில் உரு​குவே அணி பதிலடி கொடுத்​தது. அந்த அணி​யின் வீரர் உகார்த்தே பந்தை பெனால்டி பாக்​ஸிற்​குள் ஆபத்தான கிராஸ் மூலம் தூக்கி அடித்​தார். அங்கே பென்​குர் உயரே எழும்பி தலை​யால் பந்தை முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் அவர், அடித்த பந்து கேப் வெர்டே அணி​யின் வீரர் ஹோப்ஸ் காப்​ரால் மீது பட்​டு, வலது பக்க போஸ்ட்​டில் மோதித் திரும்​பியது. திரும்பி வந்த பந்தை உருகுவே வீரர் மாக்ஸிமிலி​யானோ அரவூஜோ தலை​யால் முட்டி கோல் வலைக்குள் தட்​டி​விட்​டார். இதனால் ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது.

முதல் பாதி ஆட்​டத்​தில் காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 45+6-வது நிமிடத்​தில் உரு​குவே அணி 2-வது கோலை அடித்​தது. வலது பக்​கத்​திலிருந்து உகார்த்தே தூக்கி அடித்த பந்தை அரவூஜோ தலை​யால் முட்​டி​னார். பந்து கோல் போஸ்ட்​டிற்கு வெளியே செல்​ல​விருந்த நிலை​யில், அங்கே ஓடிவந்த அகஸ்​டின் கனோபியோ மிக அரு​கி​லிருந்​த​படி பந்தை கோல் வலைக்​குள் தட்டி விட்​டார். இதனால் முதல் பாதி ஆட்​டத்​தின் முடி​வில் உருகுவே 2-1 என முன்​னிலை பெற்​றது.

61-வது நிமிடத்​தில் கேப் வெர்டே அணி​யின் வீரர் ஆலிவே​ரா, உரு​குவே அணி​யின் தற்​காப்பு வரிசைக்கு குறுக்​காக கொடுத்த பாஸை பெற்ற பதிலி வீர​ரான ஹெலியோ வரேலா விரை​வாக பந்தை கடத்​திச் சென்​றார். அப்​போது உரு​குவே அணி​யின் கோல் கீப்​பர் முஸ்​லெரா தனது எல்​லை​யில் இருந்து முன்​னேறி வந்து தடுக்க முயன்​றார். ஆனால் அவருக்கு போக்கு காட்​டிய ஹெலியோ வரேலா காலி​யாக இருந்த கோல் வலைக்​குள் பந்தை எளி​தாக செலுத்​தி​னார். இதனால் ஆட்​டம் 2-2 என சமநிலையை எட்​டியது.

ஆட்​டத்​தின் கடைசி நிமிடங்​களில் உரு​குவே அணி​யின் நட்​சத்​திர வீரர் டார்​வின் நூனியெஸ், ஃபெடெரிகோ வல்​வெர்டே ஆகியோர் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்​கொண்​டனர். ஆனால் கேப் வெர்டே அணி​யின் தற்​காப்பை அவர்​களால் உடைக்க முடியவில்லை. இறு​திவரை இரு அணி​களும் மேற்கொண்டு கோல் அடிக்​காத​தால் போட்டி 2-2 என்ற கணக்​கில் டிரா​வில் முடிந்​தது.

கேப் வெர்டே அணி தனது முதல் ஆட்​டத்​தில் வலு​வான ஸ்பெயினை கோல்​களின்றி டிரா செய்​திருந்​தது. உரு​குவே அணிக்​கும் இது 2-வது டிரா​வாக அமைந்​தது. அந்த அணி முதல் ஆட்​டத்தை சவூதி அரேபி​யா​வுக்கு எதி​ராக 1-1 என டிரா செய்திருந்தது.

இரு அணி​களுமே 2 புள்​ளி​களை பெற்​றிருந்​தா​லும் கோல்​கள் வித்தி​யாசத்​தின் அடிப்​படை​யில் உரு​குவே அணி 2-வது இடத்​தில் உள்​ளது. உரு​குவே அணி தனது கடைசி ஆட்​டத்​தில் பலம் வாய்ந்த ஸ்பெ​யினுடன் வரும் 27-ம் தேதி மோதுகிறது.

அதே​நாளில் நடை​பெறும் மற்​றொரு ஆட்​டத்​தில் கேப் வெர்​டே, சவூதி அரேபி​யா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்டத்தின் வெற்​றி, தோல்​வி அடுத்​த சுற்​று வாய்ப்​பை உறு​தி செய்​வ​தாக இருக்​கும்​. உருகுவே அணியின் கோல்கீப்பர் முன்னேறி வந்த நிலையில் பந்தை கோல் வலையை நோக்கி அடிக்கிறார் கேப் வெர்டே அணியின் ஹெலியோ வரேலா.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version