2 கோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து எழுச்சி: கூடுதல் நேர கோலால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம் | FIFA WC 2026

0
22

பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் சியாட்டில் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பெல்ஜியம் – செனகல் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின. 24-வது நிமிடத்​தில் செனகல் அணி முதல் கோலை அடித்​தது. செனகல் அணி​யின் நட்​சத்​திர வீர​ரான சடியோ மானே தனக்கு முன்​னால் இருந்த தடுப்​பாட்​டக்​காரரை நிலை​தடு​மாறச் செய்​து, பெனால்டி ஸ்பாட்டை நோக்கி பந்தை வேக​மாக கிராஸ் செய்​தார்.

அங்கே நின்ற இஸ்​மைலா சர்பந்தை தலை​யால் முட்டி கோல் அடிக்க முயன்​றார். ஆனால் பந்து வலது பக்க போஸ்ட்​டில் பட்டு திரும்​பியது. திரும்பி வந்த பந்தை அரு​கி​லிருந்து ஹபீப் தியாரா மின்​னல் வேகத்​தில் செயல்​பட்டு கோல் வலைக்குள் திணித்​தார். இதனால் செனகல் அணி முதல் பாதி ஆட்​டத்​தில் 1-0 என முன்னிலை பெற்​றது.

51-வது நிமிடத்​தில் செனகல் வீரர் மூசா நியாகடே அடித்த தொலை​தூர பாஸை கணிப்​ப​தில் பெல்ஜியம் அணி​யின் வீரர் மெச்​சேலே கோட்​டை​விட, இஸ்​மைலா சர் மின்​னல் வேகத்​தில் அவருக்​குப் பின்​னால் பாய்ந்து சென்று பந்தை நெஞ்​சால் அழகாகக் கட்​டுப்​படுத்தி பெனால்டி ஏரி​யா​விற்​குள் கொண்டு சென்​றார். அங்கு அவர், நிலை​தடு​மாறிய போதி​லும் தனது வலுவான ஷாட்​டால் பந்தை கோல் வலைக்​குள் செலுத்​தி​னார்.

இதனால் செனகல் அணி 2-0 என முன்​னிலை பெற்​றது. போட்டி முடிவடைய 4 நிமிடங்​கள் மட்​டுமே எஞ்​சி​யிருந்த நிலை​யிலும் செனகல் அணி வலு​வான நிலை​யில் இருந்​தது. ஆனால் 86-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி அடித்த கோல் காரண​மாக ஆட்டத்தின் போக்கு மாறியது. வலது பக்​கத்​தில் இருந்து பெல்ஜியம் அணி​யின் வீரர் மெயூனியர் தளர்​வாக அடித்த பந்தை கோல் கம்​பத்​துக்கு அரு​கில் இருந்த ரோமலு லுகாகு லாவக​மாக தூக்கி அடிக்க கோல் வலைக்​குள் பாய்ந்​தது.

தொடர்ந்து 89-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி​யின் லியாண்ட்ரோ டிரொஸார்ட் இலக்கை நோக்கி தூக்கி அடித்த கிராஸை கோல் கம்​பத்​துக்கு அரு​கில் நின்ற யூரி திலெமன்ஸ் துள்ளிய​வாறு தலை​யால் முட்டி கோல் அடித்​தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது. இந்த கோலால் செனகல் அணி அதிர்ச்​சி​யில் உறைந்​தது.

90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்​கில் சமநிலை​யில் இருந்​தது. காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 7 நிமிடங்​களில் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. இதையடுத்து 30 நிமிடங்​கள் கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது. இதில் 119-வது நிமிடத்​தில் பெனால்டி பாக்ஸ் பகு​திக்​குள் யூரி திலெமன்​ஸ், செனகல் வீரர் லமின் கமாராவால் ஃபவுல் செய்​யப்​பட்​டார். விஏஆர் சோதனை​யில் சுமார் 6 நிமிடங்​களுக்​குப் பிறகு பெல்​ஜி​யம் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்​கப்​பட்​டது.

இதை பயன்​படுத்தி 120+5-வது நிமிடத்​தில் யூரி திலெமன்ஸ் எளிதாக கோல் அடிக்க பெல்​ஜி​யம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் யாரும் எதிர்​ப​ராத வகை​யில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது. பெல்​ஜி​யம் அணி​யின் இந்த சர்ச்சை கோல் காரண​மாக செனகல் பரி​தாப​மாக தொடரில் இருந்து வெளி​யேறியது.

2-வது முறை​யாக வெற்றி

நடப்பு உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்​றில் செனகல் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பெல்​ஜி​யம் அணி ஒரு கட்​டத்​தில் 2 கோல்​கள் வாங்கி பின்​தங்​கிய நிலை​யில் இருந்​தது. ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து பெல்​ஜி​யம் அணி 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்​றில் பெல்​ஜி​யம் அணி இது​போன்று வெற்றி பெறு​வது இது 2-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெல்​ஜி​யம் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் ஜப்​பானுக்கு எதி​ராக 0-2 எனப் பின்​தங்​கி​யிருந்​து, பின்​னர் 3-2 என்ற கணக்​கில் வெற்றி பெற்றிருந்​தது.

கோர்​டுவா அசத்​தல்

செனகல் அணி 2-0 என்ற கணக்​கில் வலு​வான முன்​னிலை​யில் இருந்த போ​தி​லும் அந்த அணி தனது முன்​னிலையை அதி​கரித்த எடுத்த முயற்​சிகளுக்கு பெல்​ஜி​யம் அணி​யின் கோல் கீப்​ப​ரான திபோ கோர்​டுவா முட்​டுக்​கட்​டை​யாக இருந்​தது. செனகல் அணியின்​ கோல்​ அடிக்​கும்​ 3 அற்​புத​மான வாய்ப்​பு​களை தி​போ கோர்​டு​வா தடுத்​து அசத்​தினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here