தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வங்கதேச இந்து மத குருவுக்கு 5 மணி நேரம் மட்டும் பரோல்

0
24

வங்க தேசத்​தில் கடந்த 2 ஆண்​டு​களுக்​கும் மேல் சிறையில் அடைக்​கப்​பட்​டுள்ள இந்து மத குரு சின்மயி கிருஷ்ண தாஸுக்​கு, அவரது தாயாரின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​ப​தற்​காக 5 மணி நேரம் மட்​டும் பரோல் வழங்​கப்​பட்​டது.

வங்​கதேச சம்​மிலித சனாதனி ஜாகரன் ஜோத் அமைப்​பின் செய்தித் தொடர்​பாள​ரான சின்​மயி கிருஷ்ண தாஸ், 2024-ம் ஆண்டு நவம்​பர் மாதம் தேசத்​துரோகக் குற்​றச்​சாட்​டின் கீழ் கைது செய்யப்​பட்​டார். இந்த நிலை​யில், சின்​மயி கிருஷ்ண தாஸின் தாயார் சந்​தியா ராணி தார் (71) உடல்​நலக் குறை​வால் ஹட்​கா​சாரி மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தார்.

தாயின் மறைவுக்​குப் பிறகே, சிட்​ட​காங் மாவட்ட ஆட்​சி​யர் முஹம்மது ஜாஹிதுல் இஸ்​லாம் மியா, இறு​திச்​சடங்​கில் பங்கேற்க 5 மணி நேரம் மட்​டும் கிருஷ்ண தாஸுக்​குப் பரோல் வழங்கி உத்​தர​விட்​ட​தாக ‘தி டெய்லி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

சிறையி​லிருந்து தற்​காலிக​மாக வெளியே வந்த சின்​மயி கிருஷ்ண தாஸ், சிட்​ட​காங்​கில் உள்ள புண்​டரீக் தாம் கோயி​லில் உள்ள ராதா-கிருஷ்ணர் விக்​கிரகத்​தின் பாதங்​களைத் தொட்டு அழுது வணங்​கும் உணர்ச்​சிப்​பூர்​வ​மான வீடியோ காட்​சிகள் தற்போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகியுள்ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here