27-வது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் வரும் அக்டோர் 7 முதல் 13-ம் தேதி வரை கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணியை இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆடவர் அணிக்கு சரத் கமல் கேப்டனாகவும், மகளிர் அணிக்குமணிகா பத்ரா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆடவர் அணியில் மாற்று வீரர்களாக ஸ்நேஹித்எஸ்எஃப்ஆர், ஜீத் சந்திரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் மகளிர் அணியில்மாற்று வீரர்களாக யஷஸ்வினி கோர்படே, பொய்மண்டீ பைஸ்யா இடம் பெற்றுள்ளனர். உலக டேபிள்டென்னிஸ் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கியமானதகுதிசுற்றாக ஆசிய சாம்பியன்ஷிப் அமைந்துள்ளது. இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆடவர் அணி: சரத் கமல் (கேப்டன்), மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய், சத்தியன், மனுஷ் ஷா.
மகளிர் அணி: ஸ்ரீஜா அகுலா, மணிகா பத்ரா (கேப்டன்), அய்ஹிகா முகர்ஜி, தியா சித்தலே, சுதிர்தா முகர்ஜி